இன்று நாம் பெறுகின்ற ஓய்வூதியம்ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் காலத்த ில் வருவாய், காவல் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றிவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
♦ஆரம்பத்தில் 1891ல் டென்மார்க்கும், 1898ல் நியூசிலாந்தும் வயதானவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தின.1917க்குப் பிறகு, சோவியத் ஒன்றியம்தான் ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகாலப் பயன்கள் போன்ற உரிமைகளை உலகில் முதன் முதலில் சட்டப்பூர்வமாக அறிவித்து அமல்படுத்தியது.
♦இத்தகைய சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் உலகில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் புதிய உத்வேகத்தை அளித்தன. சர்வதேச சங்கமும், அதன் துணை அமைப்பான தொழிலாளர் ஸ்தாபனமும் உழைப்பாளி மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான வரைமுறைகளை வகுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ♦ஒருவர் வயது முதிர்வின் காரணமாகப் பணி ஓய்வுபெறும்போது எஞ்சிய கால வாழ்வாதாரத்திற்காக வைப்பு நிதி திட்டம் உருவாகியது.இத்திட்டத்தில் பணியாற்றுபவர்கள் தனது பங்களிப்பை செலுத்துவதோடு நிர்வாகமும் தனது பங்களிப்பை செலுத்த வேண்டும்.
♦1930 களில் உலகம் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எஸ்.எம். கெய்ன்ஸி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி மக்களின் வாங்கும் சத்தியைப் பெருக்க அரசுத்துறையில் நலத்திட்டங்களை உருவாக்கி வேலைவாய்ப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டங்களை உருவாக்கிய அரசுகள் சேமநல அரசுகள் என அழைக்கப்பட்டன.
♦அந்த அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு பங்களிப்பு வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்தின. இத்திட்டத்திற்கு அரசுகள் அளிக்க வேண்டிய பங்குத்தொகை மாதம்தோறும் அளிக்காமல் அந்த நிதியை வளர்ச்சி திட்டங்களுக்கு மடைமாற்றப்பட்டது.
♦இந்திய நாட்டில் முதலாவது ஊதியக் குழுவின் விளைவாக தளர்த்தப்பட்ட ஓய்வூதிய விதிகள் 1950 ஏப்ரல் 17ம்தேதி அமல்படுத்தப்பட்டன. அதன்படி, பொது வருங்கால சேமிப்பு நிதி உருவாக்கப்பட்டது.
♦ இத்திட்டத்தின் மூலம் மத்திய-மாநில அரசுகள் ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டும் தாங்கள் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகையை ஓய்வூதியமாக வழங்கத் துவங்கின. பின்னர், ஊழியர்களிடம் எவ்விதமான பங்களிப்பும் பெறாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
♦ஓய்வூதியச் சலுகை வழங்குவதில் முன்னர், பின்னர் என வேறுபடுத்தி பாரபட்சம் காட்டத்துவங்கியது மத்திய அரசு. அதனை எதிர்த்து டி.எஸ்.நகரா மற்றும் இதரர் பதிவு செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் 17.12.1982ல் அளித்த தீர்ப்பு நாளையே ஓய்வூதியர்களின் ‘உரிமை’ தினமாக கொண்டாட படுகிறது.
♦ உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு மகா சாசனமாகும். ஓய்வூதியம் என்பது கவுரவமாக வாழும் உரிமையின் உத்தரவாதம் என மனித உரிமை ஆணையமும் தீர்ப்பு வழங்கி யுள்ளது.
♦பணி ஓய்வு பெற்ற பிறகு கவுரவ மாகவும் சுதந்திரமாகவும் வாழ உத்தர வாதம் அளிக்க வேண்டும். ஒருவர் தனது வாழ்வில் முதுமைத் தளர்ச்சியினையும், வறுமையையும் எதிர்த்திட வழங்கப் படுவதுதான் ஓய்வூதியம்.
♦எனவே, ஓய்வூதியம் என்பது கருணைத் தொகையல்ல. அது சட்டரீதியானது. இது நிர்வாக விருப்பு வெறுப்புகளாலோ அல்லது கருணை கொண்டோ வழங்கப் படுவதில்லை.
♦பென்சன் திட்டமே பென்சன் நிதியிலிருந்து வழங்கப்படுவதில்லை. பென்சன் நிதி என்று ஒன்று இல்லை. ஓய்வூதியம் என்பது ஒரு செலவினம் என நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.
♦பென்சன் என்பது மத்திய -மாநில அரசுகள் ஏற்றுக்கொண்ட பொறுப்பாகும். அதை வழங்கவேண்டியது கடமையாகும். மத்திய - மாநில அரசுகள், தங்களுக்கு ஏற்படும் நிதிச்சுமையை குறைக்கத்தான் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள் ளன.
♦உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு தமிழகத்தில் 1.4.2003லிருந்தும் 1.1.2004 ல் மத்திய அரசு பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கும் புகுத்தப்பட்டது.
♦இதற்கிடையில், 6வது ஊதியக்குழு ஓய்வூதியம் பற்றி ஆய்வு நடத்த டாக்டர் காயத்திரி குழுவை அமைத்தது. அக்குழு ஓய்வூதியத்தில் 54.75 விழுக்காடு பாதுகாப்பு துறையினருக்கே செலவு செய்யப்படுகி றது எனவும், எதிர்காலத்தில் ஊதியம், ஓய்வூதியத்திற்கான செலவினம் குறையும் எனவும் அறிக்கை அளித்தது.
♦இந்த உண்மைகளை அறிந்த அரசுகள், புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி 30, 35 ஆண்டு காலம் ஊழியர்களின் சேமிப்பையும், அரசின் நிதியையும் பங்குச் சந்தை மூலதனமாக உலக நிதி நிறுவனங் களின் ஆணைகளுக்கேற்ப உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளுக்கு வாரி வழங்குகிறது.அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம், ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது.
♦ அதன்படி அமைக்கப்பட்டுள்ள 7வது ஊதியக்குழு விரைவில் பரிந்துரையை அறிவிக்க உள்ளது. அதற்குள், “ஏழைகளைப் பார், அவர்களது வருவாயை ஒப்பிட்டு பார்த்து பரிந்துரை செய்ய வேண்டும்” என ஊடகங்கள் முழங்
குகின்றன.
♦ஆனால், பெரு முதலாளிகளுக்கு வரிச் சலுகை, வாராக் கடன் தள்ளுபடி செய்யும்போது இந்த ஊடகங்கள் வாய் மூடி மவுனம் காக்கின்றன. போதாக் குறைக்கு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியும் வயிற்றெரிச்சலை கொட்டியுள்ளார்.
♦புதிய பொருளாதாரக்கொள்கைகளை அமல்படுத்தும் உலக நாடுகள் அனைத்துமே முதலில் ஓய்வூதியத்தை வெட்டுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளன.
♦ ஆரம்பத்தில் சிலி துவக்கி வைத்தது. அடுத்து அர்ஜெண்டினாவிலும் அமல்படுத்தப்பட்டது. பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியபோது அந்நாடுகளில் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட மிகப்பெரும் வேலை நிறுத்தங்கள் நடைபெற்று நாடே ஸ்தம்பித்தன.
♦லத்தீன் அமெரிக்காவில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது.இந்தியா ஜனநாயக நாடு. நாட்டின் வளர்ச்சி மட்டுமல்ல நாட்டின் சமூகப் பாதுகாப்பு எல்லையும் விரிந்துகொண்டே செல்கிறது.
♦நமது அரசு சமதர்ம சோசலிச பாதையில் பீடு நடைபோடும் அரசாகும். சமூக நலக் குடியரசாக பாடுபட்டுக்
♦. இதைத்தான் இந்திய அரசியல்அமைப்பு சட்டம் பிரகடனப்படுத்தி யுள்ளது. நம் நாட்டில் தொடர்ந்து விலை வாசி உயர்வால் ஏற்படும் தடுமாற்றங்கள். பணவீக்கத்தால் ஏற்படும் ஊதியக் குறைவு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி இவைகளை அறிந்த நம் நாட்டு பொருளாதார நிபுணர்களில் பெரும்பாலோனர் பொருளாதார சமத்துவம் பற்றியோ, வருவாய் சமப் பங்கீடு குறித்தோ இந்திய அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள சமத்துவ நியதியையோ சிந்திப்பதில்லை. மாறாக, ஓய்வூதியம் வழங்குவதால் அரசு திவாலாகும் என முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.
--------------------நன்றி---------------
ஓய்வூதியர் சங்க மாநில மாநாடு, கோவை,20.9.15

A person is servicing his/ her entire life to the State or Nation. Government should give or at least follow previous one for the employee benefit
ReplyDelete