புதுடில்லி;மத்திய அரசும், தொழில் துறையினரும் கொடுத்து வரும்
அழுத்தத்துக்கு பணிந்து, ரிசர்வ் வங்கி, நாளை, வட்டி விகிதத்தை குறைக்கும்
என, எதிர்பார்க்கப்படுகிறது. சீனப் பொருளாதாரம் மந்தமாகி வருவதால், உலகம்
முழுவதும், பல தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகளிலும், பொருளாதார தேக்க நிலை
காணப்படுகிறது. இதனால், திணறிக் கொண்டிருக்கும் இந்திய தொழில் நிறுவனங்கள்,
வங்கி வட்டி விகிதத்தை குறைக்குமாறு, ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி
வருகின்றன. மத்திய அரசும், வட்டி விகிதத்தை குறைக்க, ரிசர்வ் வங்கிக்கு
அழுத்தம் தந்து வருகிறது.
இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி, நாளை, நிதிக் கொள்கை அறிக்கையை
சமர்ப்பிக்கும் போது, குறுகிய காலக்கடனுக்கான வட்டி விகிதத்தை, 0.25
சதவீதம் குறைக்கும் என, வங்கித்துறையினர் எதிர்பார்க்கின்றனர். இதை
உறுதிப்படுத்தும் வகையில், கடந்த வாரம், நிருபர்களிடம் பேசிய, மத்திய
நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 'பணவீக்க விகிதம், கட்டுப்பாட்டில் உள்ளது.
இச்சூழ்நிலை யில், வங்கி வட்டி விகிதத்தை குறைப்பதே சரி' என, தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...