மாணவர்களின் வறுமையை பயன்படுத்தி, எம்.பி.பி.எஸ். சீட்டுகளை அபகரிக்கும் மருத்துவ கல்லுாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்டாக் மூலம் சேர்க்கையை பெற்ற சில மாணவர்களின் பொருளாதார நிலைமை, வறுமையை பயன்படுத்தி, சில மருத்துவ கல்லுாரி நிர்வாகத்தினர், அந்த இடத்தை, விலை பேசி பல கோடி ரூபாய்க்கு விற்க திட்டமிட்டுள்ளனர்.
சென்டாக் கலந்தாய்வின் மூலம், 7 தனியார் மருத்துவ கல்லுாரி யில், சேர்ந்த 270 மாணவர்களின், வருகை பதிவேட்டினையும், கல்லுாரிக்கு செலுத்திய கட்டண ரசீது களையும் சரி பார்த்து, கல்லுாரிக்கு வராத மாணவர்கள் யார் என கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்த மாநிலத்திலும் நடக்காத கல்வி கட்டண கொள்ளை மற்றும் குறுக்கு வழியில் சென்டாக் மருத்துவ இடங்களை அபகரிக்க நினைக் கும், மருத்துவ கல்லுாரிகளின் மீது, புதுச்சேரி அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...