Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆதார் அட்டை கட்டாயம் அல்ல என அரசாணை வெளியிட கோரி வழக்கு

    அரசின் சலுகைகளைப் பெற ஆதார் அட்டை கட்டாயமல்ல என்று அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரும் மனுவுக்கு, தலைமைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

      சிவகாசியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஏ.இ.செபாஸ்டின்ராஜ் தாக்கல் செய்த மனு: 
 எந்த ஒரு அரசு சலுகையைப் பெறவும் ஆதார் எண்ணைத் தாக்கல் செய்யுமாறு அரசு கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் 2013-இல் உத்தரவிட்டது. 
 இந்த உத்தரவை அரசாணை அல்லது சுற்றறிக்கை மூலம் அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழக அரசு தெரிவித்து இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
 இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. 
 மனுவுக்கு தமிழக தலைமைச் செயலர் 3 வாரங்களில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive