மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளில் 2014-15-ஆம் கல்வியாண்டில்
ஒரு மாணவருக்கான செலவுத் தொகை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தப்
பள்ளிகளில் ஒரு மாணவருக்கு ரூ.32,263 செலவாகிறது. இதில் அரசு மானியமாக
ரூ.25,898 வழங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள்
உள்ளன. இதில் 11 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்தப்
பள்ளிகளுக்காக மத்திய அரசு ரூ.3,047 கோடியை மானியமாக கடந்த ஆண்டு
வழங்கியது. அதோடு, பள்ளிகளின் இதர செலவுகளுக்காக ரூ.749 கோடி வரை
செலவிடப்பட்டுள்ளது.
2013-14 நிதியாண்டில் ஒரு மாணவருக்கு ரூ.29,857 செலவிடப்பட்ட நிலையில், ஒரே
ஆண்டில் இந்தத் தொகை ரூ.32,263 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மாநில
அரசு பள்ளிகளைப் பொருத்தவரை, ஒரு மாணவருக்கு தோராயமாக ரூ.6,500 வரை அரசு
செலவிடுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...