Home »
» தமிழ்ப் பாடப்புத்தகத்துடன் ஆசிரியர்களுக்கும் "கையேடு'.
தமிழ்ப் பாடப்புத்தகங்களுடன் ஆசிரியர்களுக்கான "கையேடும்' தயாரிக்கவேண்டுமென, அரசின் தமிழ் இணையக் கல்வி கழகத்திற்கு கல்வியாளர்கள் பரிந்துரை
செய்துள்ளனர்.
தமிழ்மொழி, கணித்தமிழை மேம்படுத்த தமிழ் இணையக்
கல்விக்கழகம் பல நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சமீபத்தில் பல்கலை
பேராசிரியர்கள், தமிழறிஞர்கள் "சாப்ட்வேர்' நிறுவனத்தினர் சென்னையில்
ஒன்றுகூடி ஆலோசித்தனர். அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா போன்ற
நாடுகளில் தமிழ்மொழி ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. அவர்களுக்கென
தனித்தனி பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.
அயல்நாட்டில் வசிப்போருக்கு வசதியாக கம்ப்யூட்டர் வழி "தமிழ் பயிற்சி
அளிக்கும் திட்டத்தை' செயல்படுத்த வேண்டும். பேச்சு தமிழுக்கான பாடங்களை
எழுதும்போது ஜாதிய வழக்குகள் தவிர்க்கப்பட வேண்டும். பல்வேறு மொழிச்
சூழல்களில் தமிழ் கற்போர் இழைக்கும் மொழிப் பிழைகளை தவிர்க்க நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
கற்றல், கற்பித்தல் முறைகளை அறிய ஆசிரியர்களுக்கு சிறிய நூல்களை உருவாக்க
வேண்டும். தமிழ் பாடப்புத்தகங்களுடன் ஆசிரியர்களுக்கான "கையேடுகளை'
உருவாக்க வேண்டும். தமிழ்மொழி இலக்கணத்தை கற்போரின் தாய்மொழியில் வடிவமைக்க
வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை கல்வியாளர்கள் அளித்துள்ளனர். இதனை தமிழ்
இணையக் கல்வி கழகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...