விருதுநகர் மாவட்டத்தில் ஆதார் அட்டை இல்லாத மாணவ, மாணவிகளுக்கு
பள்ளிகளுக்கு அருகே சிறப்பு மையம் அமைத்து எடுக்கப்பட உள்ளதாக மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.
பள்ளி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை அரசு
செயல்படுத்தி வருகிறது. அதில், முக்கிய அரசின் நலத்திட்டங்களான விலையில்லா
மடிக்கணினிகள், மிதிவண்டிகள், காலணிகள், சீருடைகள், இடைநிறுத்தத்தை
தவிர்க்கும் வகையில் கல்வி உதவித் தொகை, சிறப்புத் தேர்வு எழுதி வெற்றி
பெறுகிறவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்களை பெற
ஆதார் அடையாள அட்டை அவசியம் ஆக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்த அட்டைகள் மூலம் இடைநின்ற மாணவ, மாணவிகள் விவரங்களையும்
எளிதாக கண்டறிய முடியும். இதற்காக பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம்
வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளில் ஆதார் எண் பெறாதவர்கள் பெயர் விவரங்கள்
ஆசிரியர்கள் மூலம் சேகரிக்கப்படும்.
அதைத் தொடர்ந்து இல்லாதவர்களுக்கு குறிப்பிட்ட பள்ளிகளுக்கு ஒரு மையம்
என அமைத்து ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கப்பட உள்ளன. இப்பணி
அக்டோபர் முதல் வாரம் இறுதியில் தொடங்கி, தொடர்ந்து 10 நாள்களுக்குள்
முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...