ராணுவ
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையான, டி.ஆர்.டி.ஓ.,வின்
புதிய டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட மஞ்சுளா, நேற்று முன்தினம்
பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம், இந்த பதவிக்கு வந்த முதல் பெண் என்ற
பெருமையை பெற்றுள்ளார்.கடந்த
1962ம் ஆண்டு, ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்டத்தில் பிறந்த மஞ்சுளா,
உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியியல்
பட்டம் பெற்று, 1987ல், டி.ஆர்.டி.ஓ., பணியில் சேர்ந்தார்.
ஐதராபாத்தில் உள்ள, ராணுவ மின்னணு
ஆய்வகத்தில், 26 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய மஞ்சுளா, டிபன்ஸ்
ஏவியானிக்ஸ் ரிசர்ச் எஸ்டாபிளிஷ்மென்ட்டின் இயக்குனராக இருந்தார். தற்போது
டி.ஆர்.டி.ஓ.,வில், டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சிறந்த செயல் திறனுக்கான, டி.ஆர்.டி.ஓ., விருது, 2011ம் ஆண்டுக்கான சிறந்த ஆய்வாளர் விருது, 2014ம்ஆண்டுக்கான இந்தியா டுடே மகளிர் உச்சி மாநாடு விருது ஆகிய விருதுகள், மஞ்சுளாவுக்கு வழங்கப்பட்டு உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...