தமிழ்நாடு
திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் ஆகஸ்ட்
23-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnou.ac.in
என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்கள்
தேர்வு மறுமதிப்பீடு, மறுகூட்டல் ஆகியவற்றுக்கு விண்ணக்கலாம். மறு
மதிப்பீடுக்கு தாள் ஒன்றுக்கு ரூ. 400 வீதமும், மறுகூட்டலுக்கு தாள்
ஒன்றுக்கு ரூ. 100 வீதமும், விடைத்தாள் நகலுக்கு ரூ. 250 என கட்டணம்
செலுத்த வேண்டும்.
பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த உரிய படிவத்தில் "தேர்வுக் கட்டுப்பாட்டாளர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், 577, அண்ணா சாலை, சைதாப்பேட்டை, சென்னை - 600 015' என்ற முகவரிக்கு 21 நாள்களுக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...