Home »
» நாளை நடக்க இருந்த சமையலர் பணிக்கான நேர்முகத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 9) நடைபெற இருந்த சமையலர் பணிக்கான நேர்முகத் தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் விடுதிகள், உண்டு உறைவிடப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பத்திரிக்கை விளம்பரம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இந்த பணிக்கான நேர்முகத் தேர்வு புதன்கிழமை (செப்டம்பர் 9) காலை 10 மணிக்குமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், தேர்வுக் குழுவினரால் நடைபெற இருந்த நேர்முகத் தேர்வு நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் யாரும் புதன்கிழமை (செப்டம்பர் 9) தேதி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்துக்கு வர வேண்டாம். அடுத்த நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...