அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் கூடுதல் மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர் பதவிகளை நீட்டிக்க வேண்டும் என தமிழக மாவட்டக் கல்வி
அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் சங்கம் கோரியுள்ளது.
இதில் சங்கத்தின் தலைவர் தமிழ்மணி, பொதுச்செயலாளர் பா.ப்றைட் சேவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ்
கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பதவிகளை நீட்டிக்க வேண்டும்,
மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு
கலந்தாய்வு முறையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12
கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 27-ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் நடத்த
தீர்மானிக்கப்பட்டது.
பகுதிநேர சிறப்பாசிரியர்களின் கனவுகள், கற்பனைகளை இன்றோடு தகர்ந்தது. சட்ட மன்றக்கூட்டத்தின் கடைசி நாளான இன்றாவது நமக்கு நல்ல செய்தி வரும் என்று எண்ணினோம்,
ReplyDeleteஇனியும் நமக்கு எதிர்காலம்?? இருக்கா?
முதலில் நமக்கு நிகழ்காலமே இல்லை! என்ற நிலையில் எதிர்காலம் குறித்து எப்படி சிந்திக்க முடியும்?
அடுத்து வரும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் நமது கொஞ்சநஞ்ச தூக்கத்தையும் விரட்டிவிடும்.
நாம் தமிழக அரசிடம் கேட்டது ''கருணை, பிரார்த்தனை, வேண்டுதல்'' ஆனால் கிடைத்தது என்ன?
பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் ''தமிழக முதல்வர் அவர்களை'' நடமாடும் கடவுளாகத்தான் நினைத்தோம். நமது நம்பிக்கைகள் பொய்த்து விட்டதே!