Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விளையாடும் பொழுது மற்றும் வகுப்பறை முதலுதவி விஷயத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?

முதலுதவி விஷயத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?

1. அனைத்து ஆசிரியர்களுக்கும் முதலுதவி பற்றிய பயிற்சி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.2. வழக்கமான பயிற்சி முறைகளில் ஆசிரியர் முதலுதவி பற்றிய விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.3. ஆசிரியர்கள் அடிப்படையான இதயம் மற்றும் நுரையீரலுக்குரிய சுவாச மீட்சி சிகிச்சை கற்றிருக்க வேண்டும்.
4. காது, மூக்கு மற்றும் கண், மூச்சு, முறிவுகள் போன்றவை குழந்தைகளுக்குஏற்படும் பொழுது, அதற்கு ஏற்றவாறு முதலுதவி செய்ய தெரிந்திருக்க வேண்டும்.5. சில நேரம் ரத்தம் தடைபட்டு, சுவாசம் நின்று விடும் வாய்ப்பிருக்கிறது. அப்பொழுது, உணர்வு இருக்கின்றதா? இல்லையா? என்பதை அறிய உடம்பின் மெல்லிய பகுதியில் கிள்ள வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் அவருடைய வாயை திறந்து உங்களுடைய மூச்சை செலுத்த வேண்டும். அப்படி செலுத்தும் பொழுது மூச்சடைப்பு நிற்கும்.
முதலுதவி விஷயத்தில் பெற்றோர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?
1. பெற்றோர்கள் சிறு சிறு காயங்களுக்கு கட்டுப்போடுவது பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.2. உடம்புகளில் வீக்கங்கள் ஏற்படும்பொழுது எந்தெந்த பேண்டேஜிகள் பயன்படுத்துவது பற்றி தெரிந்திருக்க வேண்டும்.3. ரத்தக்கசிவு, தொடர்ந்து ரத்தம் வடிதல் போன்றவைகளை எவ்வாறு நிறுத்துவது போன்றவைகளை கண்டிப்பாக தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.4. அதுபோன்று, சமையலறையில் ஏற்படும் கத்தி வெட்டுகள், கீரல்கள் போன்றவற்றிற்கு எவ்வாறு சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருத்தல் அவசியமாகும்.இவ்வாறு, முதலுதவி விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தருணத்திலும் மற்றவர்களுக்கு உதவுவதில், மற்றவர்களின் உடல்நிலைகளில் கவனம் செலுத்துவதில் முன்னணியில் நின்று செயல்பட வேண்டும்.
வகுப்பறையில் முதுலுதவி எப்படி செய்ய வேண்டும்?1. எப்பொழுதும் வகுப்பறையில் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆபத்தான பகுதிகள் இருப்பின் அதை கண்காணித்தவராக இருக்க வேண்டும்.2. முதலுதவி செய்வதில் வயது வரம்பு கிடையாது. ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் உடனடியாக உதவ வேண்டும்.3. சம்பவ இடத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால், பாதிக்கப்பட்டவருக்கு பீதியை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துவிடும்.4. வகுப்பறையில் முதல் உதவி பெட்டி அமைந்திருக்கும் இடத்தை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.5. பாதிக்கப்பட்டவரை யாரும் சூழ்ந்திருக்காதபடி கவனமாக பார்த்துக் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் இயற்கையின் காற்று அவருக்கு கிடைக்கும்
.விளையாடும் பொழுது ஏற்படும் காயங்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும்?
1. மைதானம் மற்றும் இதர இடங்களில் விளையாடும் பொழுது சுளுக்கு, ரத்தப்போக்கு மற்றும் மூட்டு காயங்கள் ஏற்படும்.2. இதுபோன்று பாதிப்புகள் ஏற்படும்பொழுது, பாதிக்கப்பட்டவரை இழுக்கவோ அல்லது நகர்த்தவோ செய்ய வேண்டாம். ஸ்ட்ரச்சரில் வைத்து தேவையான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.3. ரத்தப்போக்கு அல்லது ரத்தக்கசிவு ஏற்பட்டவருக்கு சீக்கிரம் சிகிச்சை அளிக்க வேண்டும். உடனடியாக, ரத்த கசிவை நிறுத்த முதலுதவி பெட்டியில் இருக்கும் கட்டும் துணி மற்றும் பஞ்சு வைத்து அடிப்பட்ட இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.4. காயம்பட்டவருக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது. இக்கட்டான நேரத்தில் தேவையை உணர்ந்து கொஞ்சம் தண்ணீர் கொடுக்கலாம்.முதலுதவி பெட்டியில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும்
1. காயம்பட்ட இடத்தை சுத்தம் செய்ய துணி இருக்க வேண்டும்.2. கட்டு துணி மற்றும் பேண்டேஜ் இருக்க வேண்டும்.3. நோய் கிருமிகளை அழிக்கும் மருந்து மற்றும் காயத்தை ஆற்றுவதற்கான ஆயில்மெண்ட் இருக்க வேண்டும்.4. ஒட்டும் தன்மையுள்ள டேப் ரோல்கள் இருக்க வேண்டும்.5. முக்கோண வடிவில் சுற்றுவதற்கு பேண்டேஜ் இருக்க வேண்டும்.6. துணிகளை வெட்ட மற்றும் காயம்பட்ட இடத்தை சுற்றி இருக்கும் முடிகளை வெட்ட நல்ல கத்திரி இருக்க வேண்டும்.7. தீக்காயங்கள் ஏற்பட்ட இடங்களில் போடுவதற்கான கிரீம் இருக்க வேண்டும்.8. முறிந்த எலும்பை இணைப்பதற்காக வைத்து கட்டப்படும் சிம்பு அல்லது கட்டை இருக்க வேண்டும்.9. தெர்மோ மீட்டர் இருக்க வேண்டும்.10. காகிதம் மற்றும் பென்சில் இருக்க வேண்டும்.இதுவே, முதலுதவி பெட்டியில் இருக்க வேண்டிய முக்கியமான மற்றும் எப்பொழுதும் தேவையான பொருட்களாகும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive