சிவில் சர்வீசஸ்
தேர்வுக்கு, இலவசப் பயிற்சி பெற, தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி
தேர்வு பயிற்சி மையம், நுழைவுத்தேர்வு அறிவித்துள்ளது.
ஐ.ஏ.எஸ்.,
மற்றும் ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கு, 2016ல்,
தேர்வில் எழுதுவோருக்கு, தமிழக அரசு இலவச பயிற்சி அளிக்கிறது.சென்னை, அண்ணா
மேலாண்மை நிறுவனத்திலுள்ள, அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி
மையத்தில், 225 பேர் விடுதியில் தங்கி படிக்கவும், 100 பேர் வெளியிலிருந்து
வந்து, பகுதி நேரமாக பயிற்சி பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதற்கான
நுழைவுத்தேர்வு, நவ., 22ம் தேதி நடத்தப்படுகிறது. இதில் சேர விரும்புவோர்,
சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மை நல அலுவலகத்தில், சான்றிதழ்களின் நகல்களைக் கொடுத்து,
விண்ணப்பம் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தையும், அதே அலுவலகத்தில்
சமர்ப்பிக்க வேண்டும்.சென்னையில் வசிப்பவர்கள், ராஜா அண்ணாமலைபுரம்,
கிரீன்வேஸ் சாலையில் உள்ள அகில இந்தியக் குடிமைப் பணி தேர்வு மையப் பயிற்சி
மையத்தில் விண்ணப்பம் பெறலாம். மேலும், விவரங்களை,
www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...