பள்ளிகளில், ஆசிரியர்களின் வருகை மற்றும்
கல்வித்தரத்தை ஆய்வு செய்வது எப்படி என்பது குறித்து, மாவட்டக் கல்வி
அதிகாரியாக, பதவி உயர்வு பெற உள்ளவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாவட்ட
கல்வி அதிகாரியாக, பதவி உயர்வுக்கு காத்திருக்கும் தலைமை ஆசிரியர்களுக்கு,
தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில்,
சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.வரும், 4ம் தேதி முதல், 29ம் தேதி வரை,
சென்னையில் பயிற்சி முகாம் நடக்கிறது.
மாவட்ட கல்வி அதிகாரிகளாக பொறுப்பேற்ற பின்,
பள்ளிகளில் ஆய்வு செய்வது; ஆசிரியர்களின் வருகை மற்றும் கற்பிக்கும் திறனை
சோதனை செய்வது; மாணவர்களின் கல்வித்தரத்தை சோதித்தல் மற்றும் நிர்வாக
பணிகளை பிரச்னையின்றி கையாளுவது; அதிகாரி, ஊடகவியலாளர், பெற்றோர் மற்றும்
மாணவர்களிடம் நடந்து கொள்ளும் முறை ஆகியவை குறித்து, இந்த முகாமில் பயிற்சி
அளிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...