தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.சி.இ. பள்ளிகளில் தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்ப் பாடத் திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐ.எஸ்.சி.இ. பள்ளி கவுன்சிலின் தலைமைச் செயலாளர் ஜெர்ரி அராத்தூன் கூறினார்.
வேல்ஸ் சர்வதேசப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழா, கருத்தரங்கில் அவர் மேலும் பேசியதாவது:
மாணவர்களின் அறிவாற்றலையும்,கல்வித் திறனையும் மேம்படுத்தும் வகையில் பாடத் திட்டம், கற்பிக்கும் முறை ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்த பாடத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள செய்முறை மாதிரிகளை அவர்களாக செய்து காட்ட ஊக்குவிக்க வேண்டும். சந்தையில் கிடைக்கும் மாதிரிகளை மாணவர்கள் வாங்கி வந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளுக்கு மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை முறையைக் காரணம் காண்பித்து, பாடத் திட்டத்தின் தரத்தைக் குறைக்க முடியாது.
பாடத் திட்டத்தில் இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளைச் சேர்க்க பரிசீலிக்கப்படும் என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...