தமிழகத்தில் சித்தா,
ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்காக, ஆறு அரசு
மருத்துவக் கல்லுாரிகளில், 336 இடங்களும்; 21 சுயநிதி கல்லுாரிகளில்,
1,143 இடங்களும் உள்ளன. மொத்தமுள்ள, 1,479 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் பணி, ஜூலை, 31ல் முடிந்தது; 5,100 பேர்
விண்ணப்பித்து உள்ளனர்.
கலந்தாய்வு
அறிவிப்பு, ஒரு மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது; ஆனால்,
இதுவரை அறிவிப்பு வரவில்லை. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., முதலாமாண்டு
வகுப்புகள் இன்று துவங்கும் நிலையில், இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான
கலந்தாய்வு தேதியை இன்னும் அறிவிக்காதது, மாணவர்களை அதிருப்தியடைய
செய்துள்ளது.
சித்தா உள்ளிட்ட
இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, 'ஆயுஷ்' கவுன்சில், ஒவ்வொரு ஆண்டும்
அனுமதி தர வேண்டும். ஆய்வு கள் முடிந்தாலும், 60 சதவீத கல்லுாரிகளுக்கே
இதுவரை அனுமதி கிடைத்துள்ளது. கூடுதல் இடம் கோரி விண்ணப்பித்த
கல்லுாரிகளில், அதற்கான போதிய வசதிகள் இல்லாத தால் அனுமதி தாமதமாகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...