Home »
» இந்திய புள்ளியியல் பணி தேர்வில் அண்ணாமலைப் பல்கலை ஆராய்ச்சி மாணவர் சாதனை
மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய புள்ளியியல் பணித்தேர்வில்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் வெற்றி பெற்று சாதனை
படைத்துள்ளார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக புள்ளியியல் துறை முனைவர் பட்ட
ஆராய்ச்சி மாணவர் கி.சந்திரசேகர் இந்திய புள்ளியியல் பணித்தேர்வில் அகில
இந்திய அளவில் 24-வது தரவரிசையிலும், தமிழக அளவில் முதல் இடத்திலும்
பொதுப்பிரிவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.20 ஆண்டுகளுக்கு பிறகு
இந்த சாதனையை தமிழகத்தை சேர்ந்த மாணவர் பெற்றுள்ளார். இவர் பல்கலைக்கழக
புள்ளியியல் துறைத் தலைவர் பேராசிரியர் இரா.கண்ணனின் ஆய்வு மாணவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...