ஸ்டெம்செல் தானமளிப்போர் பதிவேட்டில் ஸ்டெம்செல்களை தானமளிப்பதற்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். உலக எலும்பு மஜ்ஜை தானமளிப்போர் தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தாத்ரி அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி ரகு ராஜகோபால் கூறியது:
தலசீமியா, ரத்தப்புற்றுநோய் உள்ளிட்ட ரத்தம் தொடர்பான நோய்களுக்கு தொடர்ந்து ரத்தப் பரிமாற்றம் செய்ய வேண்டும்.
இத்தகைய நோயாளிகள் ஸ்டெம் செல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டால் ரத்தப் பரிமாற்றத்தின் இருந்து விடுபட்டு, சாதாரண வாழ்க்கை முறையை மேற்கொள்ள முடியும். ஸ்டெம் செல் தானமளிப்பதன் மூலம் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முடியும்.
இதுவரை தாத்ரியில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் பெயரை ஸ்டெம் செல் தானத்துக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 21,330 பேரும் தமிழகத்தில் 16,854 பேரும் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...