அனைத்துக் காவல் நிலையங்களிலும் படிப்படியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட்
உறுப்பினர் அ.செüந்தரராஜன் பேசும்போது, காவல் நிலையங்களில் கண்காணிப்பு
கேமராக்கள் பொருத்த வேண்டும். முக்கியமான தெருக்களிலும் அந்த கேமராக்கள்
பொருத்தினால் குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது என்றார்.
அப்போது, ஜெயலலிதா குறுக்கிட்டுப் பேசியதாவது:
ரூ. 1.75 கோடி செலவில் மாநிலத்தில் 251 காவல் நிலையங்களுக்கு, 251 சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் கொள்முதல் செய்யப்பட்டு, பொருத்தப்பட்டுள்ளன. மேலும், மாநிலத்தில் மீதமுள்ள 1,316 காவல் நிலையங்களிலும் இந்தக் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக அது நிறைவேற்றப்படும் என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...