அரசு கட்டடங்கள் மற்றும் பள்ளிக் கட்டடங்களில் சூரிய ஒளி மின்னுற்பத்தி
மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இது குறித்த
சுற்றறிக்கை மத்திய, மாநில அரசுகளின் அனைத்துத் துறைகளுக்கும் பொதுத் துறை
நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அரசுக் கட்டடங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி கட்டடங்களில் சூரிய ஒளி மின்னுற்பத்திசாதனங்கள் நிறுவுவது மூலம் பல ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதன் மூலம் மின் கட்டணத்தை குறைக்க முடிவதுடன் கரியமில வாயு வெளியிடுவதை மறைமுகமாக தடுக்க முடியும் என்பதால் சுற்றுச்சூழலும் காக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...