தமிழக அரசு கடனில்
சிக்கித் தவிப்பதாக
தேமுதிக தலைவர்
விஜய்காந்த் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக
திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
அதிமுக அரசு
2011-இல் பதவி
ஏற்றபோது, அரசுக்கு
ரூ.1 லட்சம்
கோடி கடன்
இருந்தது. கடந்த
4 ஆண்டுகளில் அது ரூ. 2.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அரசுப் போக்குவரத்துத்
துறையிலும், மின் வாரியத்திலும் ரூ.2 லட்சம்
கோடிக்கும் அதிகமான கடன் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மொத்தமாக ரூ.4
லட்சம் கோடிக்கும்
மேல் கடனில்
தமிழக அரசு
சிக்கித் தவிக்கிறது.
கடந்த பல
ஆண்டுகளாக சுமார்
ரூ.12 ஆயிரம்
கோடி பணத்தை
மத்திய அரசின்
ஓய்வு ஊதிய
நிதி ஒழுங்காற்று
வளர்ச்சி ஆணையத்திடம்
தமிழக அரசு
ஒப்படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால்
அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது, தங்களுக்கு ஓய்வூதியம்
கிடைக்குமா என்று பலர் சந்தேகப்படுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...