Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளி இந்திய வம்சாவளி சிறுமி அசத்தல்.

          இந்திய வம்சாவளி சிறுமி லிடியா பாஸ்டின்(12), லண்டனில் நடைபெற்ற 'மென்ஸா அறிவுக்கூர்மை போட்டியில் 162 புள்ளிகள் பெற்று, இயற்பியல் வல்லுனர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்கை பின்னுக்குதள்ளி முதலிடம் பெற்றார். 

          மென்ஸா நிறுவனம், பொது அறிவுத்திறனை மதிப்பிடும் உலகின் பழமையான நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனம் நடத்திய அறிவுக்கூர்மையை கணக்கிடும், ஐ.கியூ., தொடர்பான 'கெட்டல் 3 பி' போட்டியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 12 வயது சிறுமி லிடியா செபாஸ்டின், 162 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார். பொதுஅறிவு தொடர்பாக தனக்கு கேட்கப்பட்ட 150 கடினமான கேள்விகளுக்கு, சுலபமாக பதிலளித்த இவர், இப்போட்டியில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். லிடியாவின் தந்தை, அருண் செபாஸ்டியன், கால்செஸ்ட்டர் மருத்துவமனையில் கதிர்வீச்சு துறை நிபுணராக பணியாற்றி வருகிறார். லிடியா குறித்து அவரது தந்தை கூறுகையில், 6 மாத குழந்தையாக இருந்த போது பேச துவங்கிய லிடியா, தனது 4 வயதில் வயலின் வாசிக்க கற்றுக்கொண்டார். ஹாரி பாட்டர் கதையின் 7 தொடர்களையும் 3 முறை படித்துள்ளார். பொது அறிவு சம்பந்தப்பட்ட உலக விஷயங்களை இன்டர்நெட் மூலமாகவே கற்றுக்கொண்டு இப்போட்டியில் வெற்றி பெற்றதாக அவரது தந்தை கூறினார். வெற்றி குறித்து லிடியா, முதல் சில கேள்விகளுக்கு பதற்றம் ஏற்பட்டதாகவும், பின் சகஜ நிலைக்கு திரும்பி பதிலளிக்க துவங்கிய போது கேள்விகள் மிக எளிதானதாகவே தோன்றியதாக தெரிவித்தார். உலகிற்சிறந்த இயற்பியல் வல்லுனர்களான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரின் அறிவுத்திறன் 160 ஐ.கியூ., புள்ளிகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை விடவும் 2 புள்ளிகள் கூடுதல் பெற்று சாதனை படைத்த இந்த 12 வயது சிறுமி, இந்திய வச்மாவளியை சேர்ந்தவர் என்பது நமக்கும் பெருமையே.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive