தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுனர் பதவிகளை 2 மாதங்களுக்குள் நிரப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 652 கணினி பயிற்றுனர் பதவிகள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதில் அரசு பிறப்பித்த இருவேறு ஆணைகளின் காரணமாக சிக்கல் நிலவுகிறது.
இதில் தீர்ப்பு வழங்கப்படாததையடுத்து கலப்பு திருமணம் செய்தவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள் 2 மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர். ஆனால் அது பின்பற்றபடாததால் பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை 2 மாதங்களுக்குள் விசாரித்து முடித்து காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
Court pala murai solliyachu. Ippayavathu fill pannungappa ... Nanga ellam paavam.
ReplyDelete