அடுத்த ஆண்டில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், அரசு
ஊழியர்களுக்கு இலவச வெளிநாட்டு சுற்றுலா உள்ளிட்ட பல சலுகைகளை மேற்கு வங்க
முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்திருக்கிறார்.
கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நிதி அமைச்சர் அமித் மித்ரா தலைமையில் அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கான 6வது சம்பளக் குழு அமைக்கப்படும்என்று தெரிவித்தார். அரசு ஊழியர்களின் விடுமுறைப் பயணச் சலுகையின்கீழ் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், பூடான், மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு சென்று வரலாம் என்றும் மம்தா கூறினார்.10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு ஊழியர்கள் வெளிநாட்டுச் சுற்றுலா செல்ல அனுமதிக்கப்படும் என்ற அவர், அண்மையில் வேலைநிறுத்தம் நடந்த நாளில் பணிக்கு வந்தஅரசு ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 10 சதவிகித அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றையும் மம்தா அறிவித்தார். கடும் நிதிநெருக்கடியை சந்தித்து வரும் மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசின் நிதியை கேட்டு வரும் நிலையில், தேர்தல் ஆதாயத்துக்காக மமதா இவற்றை அறிவிப்பதாக எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...