Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விநாயகர்சதுர்த்தி - பற்றி தெரிந்து கொள்வோம்

          விநாயகர் சதுர்த்தியான இன்று வழிபாட்டில் தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் இடுவோம். இதற்கான காரணம் புராணத்தில் இடம் பெற்றுள்ளது. ஒருமுறை அகத்தியர் கமண்டலத்துடன் வந்து கொண்டிருந்தார். 
 
             அப்போது காக உருவெடுத்து வந்த விநாயகர் அந்த கமண்டல நீரை தட்டி விட்டு பறந்தார். காகம் கவிழ்த்த கமண்டல நீர் ஆறாக ஓடத் தொடங்கியது. 'காகம் விரித்த நீர்' என்பதால் 'காவிரி' என்ற பெயர் அந்த ஆறுக்கு உண்டானது.
அகத்தியர் அந்தக் காகத்தைத் திரும்பிப் பார்த்தார். அந்த இடத்தில் சிறுவன் ஒருவன் நின்றிருந்தான். தான் செய்த விளையாட்டுச் செயலை எண்ணிச் சிறுவன் சிரித்தான். காகமாக வந்து கமண்டல நீரை கவிழ்த்தவன் இவனே என்பதை அறிந்த அகத்தியர், அவனது தலையில் குட்ட முயன்றார். அப்போது சிறுவனான விநாயகர் தன் சுயரூபம் காட்டி நின்றார். தவறை உணர்ந்த அகத்தியர் தன் தலையில் குட்டிக் கொண்டு மன்னிப்பு கேட்டார். தோப்புக்கரணத்திற்கு மற்றொரு புராண காரணமும் உண்டு. தேவர்களை அடிமைப்படுத்திய கஜமுகாசுரன், அவர்கள் தனக்கு தோப்புக்கரணம் இடவேண்டும் என உத்தரவிட்டான். அசுரனை வதம் செய்ய புறப்பட்ட விநாயகர், தன் தந்தத்தால் அவனை குத்திக் கொன்றார். 
விநாயகருக்கு நன்றி செலுத்தும் விதத்தில் தேவர்கள் தோப்புக்கரணம் போடத் தொடங்கினர். அன்று முதல், பிள்ளையார் அப்பனுக்கு வழிபாட்டில் தோப்புக்கரணம் இடும் முறை உண்டானது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive