''டாக்டர்கள், இன்ஜினியர்கள், அரசு அதிகாரிகள் போன்றோர், வாரத்தில்ஒரு மணி
நேரமாவது, மாணவர்களுக்கு பாடம் எடுத்து, தங்களுக்கு தெரிந்த நல்ல தகவல்களை
சொல்லிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால், மாணவர்களின் கல்வித்திறன்
மேம்பாடு அடையும்,'' என, பிரதமர் மோடி பேசினார்.
இன்று, ஆசிரியர் தினம். நாட்டின் இரண்டாவது ஜனாதிபதி, சர்வபள்ளி
ராதாகிருஷ்ணன்ஆசிரியராக பணியாற்றி, ஜனாதிபதியாக உயர்ந்ததால், அவர் நினைவைப்
போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5ம் தேதி, 'ஆசிரியர்
தின'மாக கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுடன், பிரதமர் மோடி பேசினார். டில்லியில்
இருந்தவாறு, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், நாட்டின் பல பகுதிகளிலுள்ள
மாணவர்களின், கேள்விகளுக்கு மோடி
பதிலளித்தார்.உருவாக்குவதில்...:நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:ஒருவர்
உயிரை காப்பாற்றும் டாக்டர் பற்றி, பத்திரிகைகளிலும், பிற ஊடகங்களிலும்
விரிவாக செய்தி வெளிவருகிறது. ஆனால், நுாற்றுக்கணக்கான டாக்டர்களை
உருவாக்கும் ஆசிரியர்கள் பற்றி செய்தி வருகின்றனவா? இல்லையே!அதற்காகத்
தான், ஆசிரியர்களை நினைவு கூரும் வகையில், ஆசிரியர் தினம்
கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு டாக்டர், இன்ஜினியர்,
விஞ்ஞானியின்பின்னணியிலும், ஆசிரியர் உள்ளார்.மாணவர்களை உருவாக்குவதில்
ஆசிரியர்களின் பங்கு அதிகம். இளம் வயதில், மாணவர்களின் மனதில் அனைத்து
விவரங்களும் எளிதாக பதியும். அதனால் தான், சிறு வயதில் படிக்கும் விஷயங்கள்
கடைசி காலம் வரை நினைவில் நிற்கிறது. எனவே, மாணவர்களுக்கு நல்லனவற்றை
ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்
கலாம், ஒரு சிறந்த ஆசிரியராக அனைவராலும் நினைவு கூரப்படுகிறார்.
பள்ளிகளில், மாணவர்களுக்கு, 'காண்டக்ட், கேரக்டர் சர்ட்டிபிகேட்' எனப்படும்
நடத்தை சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதை, கேரக்டர் மற்றும் ஆப்டிடியூட்
எனப்படும், நடத்தையுடன் திறன் சான்றிதழாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
நடத்தையும், திறனும் மாணவர்களுக்கு அவசியம்.அடுத்த ஏழாண்டிற்குள், நாடு
முழுக்க, 24 மணி நேரமும் மின் வினியோகிக்க வேண்டும் என்பது தான் என்
லட்சியம். மின்சாரம் இல்லாத, 18 ஆயிரம் கிராமங்களுக்கு, அடுத்த, 1,000
நாட்களில் மின்சாரம் வழங்க வேண்டும் என்பது இலக்கு.
நல்ல தகவல்:
நாட்டில் நல்ல நிலைமையில் உள்ளவர்கள், டாக்டர்கள், இன்ஜினியர்கள், அரசு
அதிகாரிகள் போன்றோர், வாரத்தில் ஒரு மணி நேரமாவது, மாணவர்களுக்கு பாடம்
எடுத்து, தங்களுக்கு தெரிந்த நல்ல தகவல்களை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால், மாணவர்களின் கல்வித்திறன் மேம்பாடு அடையும்.இவ்வாறு
பிரதமர் மோடி கூறினார்.நிகழ்ச்சியில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை
அமைச்சர் ஸ்மிருதி இரானியும் பங்கேற்றார்.நீண்ட காலமாக சலவை
செய்தேன்!''அரைக்கை சட்டை அணிவது எளிதாக இருக்கிறது என்பதால் தான்
அணிகிறேன். என் ஆடைகளை வடிவமைக்க தனியான வடிவமைப்பாளர் யாரையும் வைத்துக்
கொள்ளவில்லை,'' என, பிரதமர் மோடி கூறினார்.
'நீங்கள் ஏன் அடிக்கடி, அரைக்கை சட்டை அணிகிறீர்கள்?' என, மாணவர் ஒருவரின் கேள்விக்கு, மோடி அளித்த பதில்:
நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவன். சிறு வயதில்நிறைய சட்டைகள் கிடையாது.
ஒன்றிரண்டு சட்டைகளையும், தேய்த்து அணிய வேண்டும் எனவிரும்புவேன். சட்டையை
விரித்து, சாப்பிடும் தட்டில் தீ கங்குகளை கொட்டி, சுருக்கங்களை நீக்க,
தேய்ப்பது வழக்கம். நீண்ட காலமாக என் உடைகளை நானே சலவை செய்து வந்தேன்.
அதனால், அரைக்கை சட்டைகளை அணிய துவங்கினேன். அதுவே வழக்கமாகப்போய்விட்டது.
நான் அணியும் ஆடைகள் எளிமையானவை. தனியாக வடிவமைப்பாளர் யாரையும் வைத்துக்
கொள்ளவில்லை. அவ்வாறு வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை.இவ்வாறு பிரதமர்
மோடி கூறினார்.பள்ளிக்கு செல்லும் நாட்களில், காலில் அணியும், 'ஷூ'க்களை
பாலீஷ் செய்ய பணம்இல்லாத நிலையில், வகுப்பறையில் மிஞ்சும் சாக்பீஸ்
துண்டுகளை எடுத்து, வெள்ளை நிற கேன்வாஸ் ஷூ மீது தேய்த்து, வெள்ளை நிறத்தை
பராமரிப்பேன்.நரேந்திர மோடிபிரதமர்சிறந்த பேச்சாளராக மாறநிறைய கேட்க
வேண்டும்!'
உங்களைப் போன்ற சிறந்த பேச்சாளராக மாறுவது எப்படி?' என, மாணவி ஒருவர் கேட்டதற்கு, மோடி அளித்த பதில்:
சிறந்த பேச்சாளராக மாறுவதற்கு முன், நிறைய கேட்பவராக மாற வேண்டும். பலரின்
உரைகளை கேட்க வேண்டும். பல தலைவர்களின் உரைகளை, 'யூ டியூப்' இணையதளத்தில்
பார்த்து, கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.மேடையில் பேசும்போது, நாம்
என்னபேசுகிறோம் என்பதை மட்டும் கவனிக்க வேண்டும். பிறர் என்ன நினைப்பர்
என்றோ, பிறரின் மன ஓட்டங்களையோ கவனிக்கக் கூடாது; பதற்றப்படக் கூடாது;
தெளிவாக பேச வேண்டும்.இவ்வாறு மோடி கூறினார்.
சிக்கனத்தால் தேச சேவை!
பிரதமர் மோடியுடன், நெல்லை மாணவி விசாலினியும் பேசினார். 15 வயதாகும் இவர்,
கம்ப்யூட்டர் நெட்வொர்க் பிரிவில் அதிக திறமையை கொண்டவர். இதனால்,
ஒன்பதாம் வகுப்பு முடித்ததும், ஸ்ரீவில்லிபுத்துார் கலசலிங்கம் பல்கலையில்,
பி.டெக்., முதலாமாண்டு படித்து வருகிறார்.விசாலினி, பிரதமருடன்
பேசும்போது, முதலில், ''வணக்கம்,'' என்றார். மோடியும், ''வணக்கம்,''
என்றார். ''நான் நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறேன். அதற்கு தாங்கள்
கூறும் அறிவுரை என்ன,'' என, விசாலினி கேட்டார்.
அதற்கு மோடி அளித்த பதில்:
நாட்டிற்கு சேவை செய்வதற்கு தேர்தலில் போட்டியிட்டுமக்கள் பிரதிநிதியாக
வேண்டும் என்றோ, ராணுவத்தில் சேர்ந்துதான் பணியாற்றவேண்டும் என்றோ
தேவையில்லை. நம் தினசரி வாழ்வில் சிக்கனங்களை கடைப்பிடித்தாலே நாட்டிற்கு
சேவை செய்தது போலத்தான். குறிப்பாக, மோட்டார் சைக்கிளில் கிளம்புகிறோம்.
அப்போது, மொபைலில் அழைப்பு வருகிறது. வண்டியை நிறுத்தி இன்ஜினை ஓட
விட்டுக்கொண்டே பேசுவதால் பெட்ரோல் இழப்பு ஏற்படுகிறது. அதுபோல் உணவை
வீணடிக்கிறோம். அதில் சிக்கனம் தேவை. நம் வீட்டில் பணிபுரியும், 40 வயதை
கடந்தவர்களுக்கு நம்மால் முடிந்த கல்விப் பணியாற்றலாம் இதெல்லாம்
நாட்டிற்கு சேவை செய்வது தான்.இவ்வாறு பிரதமர் பதிலளித்தார்.
மோடியுடன் உரையாடிய பிறகு, நிருபர்களிடம் விசாலினி கூறியதாவது:பிரதமர்
பங்கேற்கும் நிகழ்ச்சி யில் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி; விரைவில் அவரை
நேரில் சந்திப்பேன். சிறுவயதில் இருந்தே கம்ப்யூட்டர் துறையில்
சாதிக்கவேண்டும் என்ற ஆர்வம் உண்டு. நானே சொந்தமாக நெட்வொர்க்கிங் நிறுவனம்
ஏற்படுத்துவேன். மன வளர்ச்சி குன்றியோரை பராமரிக்கும் மையம் ஒன்றை
ஏற்படுத்துவேன்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், விசாலினியின்
பெற்றோர் கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...