Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டி.இ.ஓ., பதவி உயர்வில் விரும்பிய இடங்கள்! கல்வித்துறை திடீர் 'கரிசனம்'

            மதுரை:கல்வித் துறையில் மாநில அளவில், 70க்கும் மேற்பட்ட டி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக இருந்தன. டி.இ.ஓ., பதவி உயர்வு 'பேனல்' ரெடியாக இருந்தபோதும் காரணமே தெரியாமல் பதவி உயர்வு அளிப்பதில் இழுத்தடிக்கப்பட்டது. இதனால், டி.இ.ஓ., பதவியே கிடைக்காமல் தலைமையாசிரியர் பலர் ஓய்வு பெறும் சூழ்நிலை ஏற்பட்டது.

                 நேற்று முன்தினம் இரவு 52 பேருக்கு பதவி உயர்வு அளித்து கல்வித் துறை உத்தரவிட்டது. ஆனால், 80 பேர் 'பேனலில்' இருந்தபட்சத்தில், 76 காலியிடங்களுக்கு 52 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதனால், மீதமுள்ள பலர், ஓய்வு பெறும் வயதில் உள்ளதால் அவர்களின் டி.இ.ஓ., கனவு நிறைவேறாமல் போயுள்ளது.வழக்கமாக, டி.இ.ஓ., சி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வின் போது, தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வடக்கிலும், வட மாவட்டத்தினருக்கு, தெற்கிலும் பணியிடம் ஒதுக்கி, அலைக்கழிப்பது கல்வித்துறையில், பல ஆண்டு வழக்கம். ஆனால், இந்தாண்டு பெரும்பாலும் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. இதனால் 'செலவில்லாமல்' பதவி உயர்வு கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
கல்வித்துறையில் அதிகாரிகள் பதவி உயர்வு என்றாலே, துாரத்தில் உள்ள மாவட்டங்களில் தான் பணியிடங்கள் ஒதுக்கப்படும். அதன்பின் 'கவனிக்க வேண்டியவர்களை கவனித்து' மீண்டும் சொந்த மாவட்டத்திற்கு பணிமாற்றம் பெறுவர். ஆனால், தற்போதைய இயக்குனர் கண்ணப்பனின் முயற்சியால், பலருக்கும் சொந்த மாவட்டங்களிலேயே, பணியிடங்கள் கிடைத்துள்ளன.மதுரையை சேர்ந்த துரைப்பாண்டிக்கு பரமக்குடி ஒதுக்கப்பட்டது. ஆனால், மதுரை மாவட்டத்தில் மேலுார் காலியாக இருந்ததால், கல்வித்துறையே முன்வந்து அவருக்கு மேலுாரை ஒதுக்கியது. இவர்களில் பலர், ஒருசில மாதங்களில் ஓய்வுபெறும் நிலை உள்ளதால், அவர்களுக்கு கல்வித்துறை சிறப்பு 'கரிசனம்' காட்டியுள்ளது. இது வரவேற்கத்தக்கது, என்றனர்.




1 Comments:

  1. பட்டதாரி ஆசிரியர் கவுன்சிலிங் காலாண்டு விடுமுறையில் இதே போல் இருக்கும் இடங்கள் அவரவர் சொந்தமாவட்டத்தில் கிடைக்குமா?..... மக்களின் நிரந்தர முதல்வர் அம்மா......

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive