சிவகங்கை;டி.என்.பி.எஸ்.சி., மூலம் பணியில் சேர்ந்த வி.ஏ.ஓ.,க்களை
பணிவரன்முறை செய்யாமல் அரசு இழுத்தடிப்பதாக புகார்
எழுந்துள்ளது.தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., மூலம் கடந்த 2008ல் இருந்து
இதுவரை 6ஆயிரம் வி.ஏ.ஓ.,க்கள் நேரடியாக தேர்வாகியுள்ளனர்.
இவர்கள் பணியில் சேர்ந்து ஒரு ஆண்டுக்கு பின்
தாசில்தார் பரிந்துரைப்படி, வி.ஏ.ஓ.,க்களை ஆர்.டி.ஓ.,பணிவரன்முறை
செய்யவேண்டும். பணியில் சேர்ந்து 2 ஆண்டுக்கு பின் அவர் மீது எவ்வித
குற்றச்சாட்டும் இல்லாத பட்சத்தில், அவர்களுக்கு 'புரபேசனரி ஆர்டர்' வழங்க
வேண்டும். ஆனால் வழங்கவில்லை. இதனால் மாநில அளவில் 4 ஆயிரம் வி.ஏ.ஓ.,க்கள்
பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
வி.ஏ.ஓ., சங்க சிவகங்கை மாவட்ட தலைவர் கோபிநாத் கூறுகையில், “2008ல்
இருந்து பணியில் சேர்ந்த வி.ஏ.ஓ.,க்களில் 2 ஆயிரம் பேர் உதவியாளராக பதவி
உயர்வு பெற்றுவிட்டனர். தற்போதுள்ள 4 ஆயிரம் பேருக்கு பணிவரன்முறை, சம்பள
உயர்வு, பணிப்பதிவேட்டில் விபரம்
எழுதுதல் போன்ற எப்பணிகளையும் செய்யவில்லை.,” என்றார்.
வி.ஏ.ஓ., சங்க மாநில பொது செயலாளர் கே.வெங்கடேஸ்வரன் கூறுகையில்,“புதிய
வி.ஏ.ஓ.,க்கள் பணியில் சேர்ந்த ஒரு ஆண்டுக்கு பின் ஆர்.டி.ஓ.,க்கள் அவர்களை
பணிவரன்முறை செய்யவேண்டும். அப்படி செய்யாமல் இருப்பது தவறு. வாரிசு
அடிப்படையில் வி.ஏ.ஓ., பணியில் சேர்ந்தவர்களுக்கு, அரசே நேரடியாக
பணிவரன்முறை செய்ய வேண்டும். அதற்கு தான் தற்போது கால தாமதம் ஆகிறது.
அதையும் விரைந்து முடிக்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்,” என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...