போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சிக்கு ஏழை பட்டதாரி இளைஞர்களிடம்
இருந்து விண்ணப்பங்களை சென்னை மாநகராட்சி வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி:
சென்னை மாநகரில் படித்த ஏழை, எளிய பட்டதாரி இளைஞர்களின்
நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும்
வகையில் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சிகளை சென்னை மாநகராட்சி
வழங்கி வருகிறது.
இதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான மத்திய அரசு தேர்வாணைய (யுபிஎஸ்சி)
குடிமைப் பணிகள் தேர்வுக்கான பயிற்சி சென்னை செனாய் நகர் அம்மா அரங்கில்
வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி)
போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி சென்னை சைதாப்ட்டையில் உள்ள சென்னை ஆண்கள்
மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மையங்களிலேயே வழங்கப்படுகின்றன.
விருப்பமுள்ள ஏழை பட்டதாரி மாணவர்கள் இந்த விண்ணப்பத்தை நேரில் பெற்று
விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...