சத்துணவு ஊழியர்கள் மீது, தடியடி நடத்தவில்லை' என, சமூகநலத் துறை அமைச்சர்
வளர்மதி கூறினார். இதுதொடர்பாக, சட்டசபையில் அமைச்சர் வளர்மதி கூறியதாவது:
கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணியாக வந்த சத்துணவு அமைப்பாளர்கள், முதல்வரை
சந்திக்க வேண்டும் என்றனர்.
அவர்களை, சமூகநலத் துறை செயலர் சந்தித்துப் பேசினார். அதன்பின், அமைச்சரை
சந்திக்க வேண்டும் என்றதால், என் வீட்டுக்கு, இரவு 10:45 மணிக்கு வந்தனர்.
அவர்களது கோரிக்கைகளை, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறினேன்.
இதையடுத்து, அவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். அவர்கள் மீது, தடியடி
எதுவும் நடத்தவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...