கல்பாக்கம் சுற்றுப்புற பகுதி அரசு பள்ளிகளில், காலி
பணியிடங்களில்,தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, சென்னை அணுமின் நிலையம்
ஏற்பாடு செய்துள்ளது. கல்பாக்கம் சுற்றுப்புற கிராமங்களில் இயங்கி வரும்
பள்ளிகளில், அறிவியல் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு, ஆசிரியர்கள்
இல்லாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வந்தது.
எனவே, மாணவர் களின் நலன் கருதி, சென்னை அணுமின் நிலைய நிர்வாகம்,
பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், தொண்டு நிறுவனத்தின் மூலம்,
இந்த காலி பணியிடங்களுக்கு, தற்காலிகமாக ஆசிரியர்களை நியமித்து, சில
ஆண்டுகளாக சேவை அளித்து வருகிறது. தற்போது, புதுப்பட்டினம்,
சதுரங்கப்பட்டினம், மணமை, மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள, மேல்நிலைப்
பள்ளிகள் உட்பட, 17 பள்ளிகளில், 25 ஆசிரியர்களை நியமிக்க, நிலைய நிர்வாகம்,
ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஆசிரியர்கள், இம்மாதம் துவங்கி, அடுத்த ஆண்டு மே மாதம் வரை பணிபுரிய
உள்ளனர். இதற்காக, நிலைய நிர்வாகம், தொண்டு நிறுவனத்திற்கு, 21.46 லட்சம்
ரூபாய் வழங்க முடிவு செய்து, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, ஆசிரியர்
தினத்தன்று, கல்பாக்கம், இந்திய அணுமின் கழக விருந்தினர் மாளிகையில் நடந்த
நிகழ்ச்சியில் செய்துள்ளது. அந்த நிகழ்ச்சியில், நிலைய இயக்குனர்
கோட்டீஸ்வரன், சமூக பொறுப்புக்குழு தலைவர் சுரேஷ், மனிதவள கூடுதல்
பொதுமேலாளர் தனசேகரன், மேலாளர் நிர்மலாதேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
how to apely fr this post give any idea.
ReplyDeletehow to apely fr this post give any idea.
ReplyDelete