அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்களை
நிரப்புவதற்காக கடந்த 21.9.2014 அன்று போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து
நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு ‘இந்திய அரசியல் சாசனம் மற்றும் சர்வதேச
சட்டம்’ பாடம் நீங்கலாக மற்ற பாடங்களுக்கான தேர்வு பட்டியல் கடந்த
27.3.2015 அன்று வெளியிடப்பட்டது.இந்த நிலையில், தேர்வு பட் டியல்
வெளியிடப்படாமல் இருந்த ‘இந்திய அரசியல் சாசனம் மற் றும் சர்வதேச சட்டம்’
பாடத்துக் கான தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில்
(www.trb.tn.nic.in) வெளியிட்டுள் ளது. முதுநிலை விரிவுரையாளர் பணிக்கு
தேர்வு செய்யப்பட்டவர் களுக்கு பணிநியமன ஆணை சட்டக் கல்வி இயக்ககத்தின்
மூலம் வழங்கப்படும் என்றுஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர்
தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...