புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள 900 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில்
நிரப்பப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில்
ஆசிரியர் தினவிழாவில் பங்கேற்ற அவர், 20 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர்
விருதுகளை வழங்கி பாராட்டினார்.
பின்னர் பேசிய அவர், புதுச்சேரியில் அடுத்தாண்டு முதல் சுகாதாரமான கழிவறை, சுத்தமான குடிநீரை பராமரிக்கும் அரசு பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு மத்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம்கிடைத்துள்ளதாகவும், அங்கு முதுகலை மருத்துவப் பட்டப்படிப்பை தொடங்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் ரங்கசாமி தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...