ஜேக்டோ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பொது வேலை நிறுத்தப்போராட்டம்
திட்டமிட்டபடி அக்.8 -ஆம் தேதி நடைபெறும் என்றார் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலர் க. மீனாட்சிசுந்தரம்.புதுக்கோட்டையில்
இன்று நடைபெற்ற மாநில விரைவுச் செயற்குழுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர்
செய்தியார்களிடம் மேலும் கூறியது:
தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத்தலைவர் பங்கேற்று வழங்கி வருகிறார். ஆனால், மாநில அரசின் டாக்டர் ராதாகி்ருஷ்ணன் விருதை தமிழக முதல்வர் வழங்காதது ஆசிரியர் சமூகத்தை அலட்சியப்படுத்துவதாகவே கருத வேண்டியுள்ளது. 2011 -ல் நடந்த சட்டமன்றத்தேர்தல் பிரசாரத்தின்போது ஊதிய முரண்பாடுகள் களையப்படும், புதிய ஓய்வூதியத்திட்டம் ரத்து செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இக்கோரிக்கைகள் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு சங்கங்கள் தனித்தனியாகவும்க, கூட்டாகவும் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தபோதும், அரசு அசைந்து கொடுக்கவில்லை. தமிழ் வழிக்கல்வி, தகுதித்தேர்வு ரத்து, உயிர் பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும். தமிழகத்தில் பூரண மது விலக்கை அமலாக்க வேண்டும். முதல் கட்டமாக பள்ளி,கல்லூரிகளில் அருகேயுள்ள மதுக்கடைகளை அகற்ற முன் வரவேண்டும். அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் தொடர்பாக அண்ணா பிறந்தநாளான செப்.15 -ம் தேதிக்குள் நிறைவேற்றவேண்டிய பணிகள் குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செப்.2- ல் நடைபெற்ற அனைத்துத்தொழில்சங்கங்களின் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது எந்த மாநிலத்திலும் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஒரு நாள் ஊதியத்தைப்பிடித்தம் செய்துள்ளது. இது, அக்.8 -ல் நடைபெறவுள்ள ஜேக்டோ போராட்டத்தை நசுக்குவதற்காகவும், மிரட்டுவதற்காகவும் செய்த செயலாகும். இந்திராகாந்தி கால மிசாவையும், 2001-06 எஸ்மா, டெஸ்மாவையும் சந்தித்தவர்கள். நாங்கள் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். திட்டமிட்டபடி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும். அதில், எழுர்ச்சியுடன் ஆசிரியர்கள் பங்கேற்பார்கள். ஜேக்டோ வுக்கு எதிரான வழக்கை சட்டரீதியாகச்சந்திப்போம். ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள விஷயத்தில் அரசின் அறிக்கைகள் தவறாக உள்ளன.
உண்மையில் தமிழகம் முழுதும் சுமார் 1.25 லட்சம் ஆசிரியர் காலியிடங்கள் உள்ளன. அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களின் குழந்தைகளைப் படிக்க வேண்டும் என்ற யோசனை நாங்கள் முழுமனதுடன் வரவேற்கிறோம். இதை தலைமைச்செயலகத்தில் பணியாற்றும் அரசுச்செயலர்களின் குழந்தைகளிடமிருந்து தொடங்க வேண்டும் என்றார். இதில், மாநிலத்தலைவர் இலா. தியோடர்ராபின்சன், மாநிலப்பொருளர் அம்பை ஆ. கணேசன், துணைச்செயலர் நா. சண்முகநாதன், மாவட்டச்செயலர் சி. கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஒரு பக்கம் சம்பளம் போதவில்லை என்று போராட்டம். இன்னொருபக்கமோ படித்து பட்டம் வாங்கிவிட்டு சாப்பாட்டுக்கு கூட வழியில்லை என்று திண்டாட்டம்! ஏன் இந்த பாகுபாடு?
ReplyDelete