Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

யு.ஜி.சி., அங்கீகாரத்துடன் 88 படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை

        பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் அங்கீகாரத்துடன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது; மொத்தம், 88 படிப்புகளில் மாணவர்கள் சேரலாம்.
 
        மாணவர் சேர்க்கைகடந்த, 2002ல் துவங்கப்பட்ட, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், முதலில், 14 படிப்புகள் அறிமுகமாகின. ஆண்டுதோறும், 14 ஆயிரம் மாணவர்கள் படித்தனர். தற்போது, 88 படிப்புகளுடன், ஆண்டுக்கு, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமோ பட்டங்கள் வழங்கப்படுகின்றன.  
யு.ஜி.சி., அங்கீகாரத்துடன் புதிய கல்வியாண்டுக்கான, மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டு
உள்ளது.இதுகுறித்து, பல்கலை துணைவேந்தர் டாக்டர் சந்திரகாந்தா ஜெயபாலன் அளித்த பேட்டி:நாட்டின் முன்னணி பல்கலைகளைப் போல, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையும், நவீன தொழில் நுட்பத்துடன் பட்டப்படிப்புகளை நடத்துகிறது. இன்னும் ஒரு மாதத்தில், யு.ஜி.சி.,யின், '12 பி' அந்தஸ்து கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் மாணவர்களின் படிப்புக்கும், பல்கலை வளர்ச்சிக்கும், கூடுதல் நிதியுதவி மற்றும் சலுகைகள் கிடைக்கும்.
வேலைவாய்ப்புதற்போது, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கப்பட்டுள்ளது; அக்டோபர் இறுதி வரை விண்ணப்பங்கள் பெறலாம். இந்த ஆண்டு முதல், புதிதாக, 20 படிப்புகளுடன், மொத்தம், 88 படிப்புகள்
நடத்தப்படும். 15க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி படிப்புகளும் நடத்தப்பட உள்ளன. மத்திய அரசின் தேசிய திறன் மேம்பாட்டுக்கழகமான, என்.எஸ்.டி.சி., மூலம், 217 சமுதாய கல்லுாரிகளில், 18 வகை தொழிற்கல்வி படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இந்த மாணவர்களுக்கு, மூன்று மாதம் உதவித்தொகையுடன், உள் வளாக பயிற்சியுடன், வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்கிறோம்.
இந்தியாவில் வேறு எந்தப் பல்கலையிலும் இல்லாத வகையில், எங்கள் பல்கலையில் தான், ஆண்டுக்கு, 1,560 ரூபாய் என, மிகக்குறைந்த கட்டணத்தில் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.
பட்டம்வெளிநாட்டு பேராசிரியர்கள் மூலம், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இணையதளம் மூலமான பாடம் கற்பித்தல் முறையையும், விரைவில் அறிமுகம் செய்ய உள்ளோம். இதற்காக பிரம்மாண்ட, 'ஸ்டூடியோ' அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த கல்வியாண்டில், 15 ஆயிரம் பெண்கள், 207 மாற்றுத்திறனாளிகள் உட்பட, 31 ஆயிரம் பேர், இளங்கலை மற்றும் டிப்ளமோ படிப்புகள் முடித்து உள்ளனர்.
வரும், 10ம் தேதி, சென்னை பல்கலை நுாற்றாண்டு அரங்கில், பட்டமளிப்பு விழா நடக்கிறது. தமிழக கவர்னர் ரோசய்யா, யு.ஜி.சி., துணைத் தலைவர் தேவராஜ் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

பல்கலையில் உள்ள வசதிகள்
* ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்ச், சீன மொழிகளுக்கு, மொழி ஆய்வகம் மூலம் கணினி வழி படிப்பு; இந்தியையும் விருப்ப மொழியாக தேர்வு செய்யும் வசதி
* இந்த ஆண்டு முதல், இஸ்லாமிய இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பு
* கணினி பாட மையங்கள், 153 மூலம் கணினி டிப்ளமோ தொழிற்கல்விப் படிப்புகளுடன் உடனடி வேலைவாய்ப்பு
* எம்.ஏ., மனித உரிமை, போலீஸ் நிர்வாகம், சர்வதேச உறவு போன்ற புதிய படிப்புகள்
* மாணவர்கள் ஒரே நேரத்தில், பி.இ., - பி.டெக்., போன்ற, 'ரெகுலர்' படிப்புகளில் சேர்ந்தாலும், அவர்கள் தங்களுக்கான கலை மற்றும் அறிவியல் பாடத்தை, ஒரே நேரத்தில், தொலைநிலைக் கல்வியில் படிக்க வாய்ப்பு. இதன்படி படித்த பலர், டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive