இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் 5
ஆண்டுகளுக்கு மேலாக 8184 பணியாளர்களுக்கு பணி வரன்முறை ஆணையை முதல்வர்
ஜெயலலிதா வழங்கினார்தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி
இருப்பதாவது:
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக 8,184 பணியாளர்கள் தினக் கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் நீண்ட காலமாக தங்களுடைய வாழ்வாதாரத்தை சீரமைத்திட தங்கள் பணியினை ஊதிய விகித அடிப்படையில் வரன் முறைப்படுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.இவர்களது குடும்ப சூழ் நிலையைக் கருத்தில் கொண்டு, தினக் கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் பணி புரியும் பணியாளர்களின் தகுதி மற்றும் நன்னடத்தை அடிப்படையில் ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களது பணி வரன்முறை செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா 12.8.2014 அன்று சட்டப் பேரவையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் தினக் கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் 5 ஆண்டு காலம் (31.7.2014 அன்றுடன்) தொடர்ந்து பணிபுரிந்த 8184 பணி யாளர்களுக்கு பணி வரன் முறை செய்து கால முறை ஊதியத்திற்கான ஆணையினை வழங்கிடும் அடையாளமாக 3 பணியாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆணைகளை வழங்கினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...