Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கள்ள நோட்டுகளை தடுக்க புதிய 7 ரகசிய அடையாளங்கள்: ரிசர்வ் வங்கி நடவடிக்கை


கள்ள நோட்டுகளை தடுக்க புதிய 7 ரகசிய அடையாளங்கள்: ரிசர்வ் வங்கி நடவடிக்கை

    நாடு முழுவதும் ரூ.500, ரூ.1000 கள்ள நோட்டுகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக ரிசர்வ் பாங்கிக்கு புகார்கள் வந்துள்ளன. வங்கி ஏ.டி.எம்.களில் எடுக்கும் பணத்திலும் கள்ள நோட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 
 
இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் குலைக்கும் வகையில் பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகள் இவ்வாறு கள்ள நோட்டுகளை தயாரித்து இந்தியாவுக்குள் கள்ளத்தனமாக கடத்தி புழக்கத்தில் விட்டு வருவதை தேசிய புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்து உள்ளது.
இதையடுத்து ரிசர்வ் வங்கி புதிதாக 7 ரகசிய குறியீடுகளுடன் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வெளியிட முடிவு செய்துள்னது. இதற்காக அதி நவீன ரூபாய் நோட்டு அச்சடிப்பு எந்திரம் தருவிக்கப்பட்டு உள்ளது.
ரூபாய் நோட்டுகளில் தற்போது வரிசை எண்கள் ஒரே சீரான அளவில் உள்ளது. புதிய ரூபாய் நோட்டில் இதில் மாற்றம் செய்யப்பட்டு எண்களின் உயரம் ஒரே சீராக இருக்காது.
மேலும் காந்தியின் பிம்பம், ரூபாய் நோட்டில் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா என்ற எழுத்தில் மேடு பள்ளம் போன்றவை உள்பட சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரகசிய குறியீடுகளை வங்கி ஊழியர்கள் மட்டுமின்றி சாதாரண மக்களும் தெரிந்து கொண்டு கள்ள நோட்டை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு உருவாக்கப்பட்டு உள்ளது.
விரைவில் இந்த நோட்டுகள் புழக்கத்துக்கு வருகிறது. புதிய நோட்டுக்கள் வந்ததும் பழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. அப்போது பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். இதன்மூலம் கள்ள நோட்டுக்கள் ஒழிக்கப்படுவதுடன் கருப்பு பணமும் வெளியே கொண்டு வரப்படும் என்று ரிசர்வ் பாங்கி திட்டமிட்டுள்ளது.
இந்தியாவுக்குள் தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்தும் அரபு நாடுகளில் இருந்தும் கள்ள நோட்டுகள் கடத்தப்படுகின்றன. மலேசியா, தாய்லாந்து, ஓமன் ஆகிய நாடுகளில் இருந்தும் கள்ள நோட்டுகள் இந்தியாவுக்கு கடத்தப்படுவது தெரிய வந்துள்ளது.
கடந்த 2014–ம் ஆண்டில் நாடு முழுவதும் சிக்கிய 30,354,604 கள்ள நோட்டுகளில் குஜராத்தில் தான் அதிக அளவாக 8,747,820 கள்ள நோட்டு சிக்கியுள்ளது.
அடுத்து ஆந்திராவில் 5,437,600 கள்ள நோட்டுகளும், பஞ்சாபில் 3,249,000 கள்ள நோட்டுகளும், பஞ்சாப் – அரியானாவில் 1,696,850 கள்ள நோட்டுகளும் சிக்கியுள்ளன.
சென்னையில் ரூ. 1000, ரூ. 500 கள்ள நோட்டுகள் நடமாடுவதை வங்கி அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். வங்கியில் பிடிபட்ட கள்ள நோட்டுகளில் ஊழியர்கள் ‘‘செல்லாத நோட்டு’’ என்று முத்திரை குத்தி ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive