மாணவர்களின்
படிப்புக்கு பணம் இடையூறாக இருக்க கூடாது என்று மத்திய அரசு உயர் கல்விக்
கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட
தொழிற் கல்வி பயிலும் மாணவர்கள் கல்விக் கடனை பெறலாம்.
இந்த திட்டத்தின்படி உள் நாட்டில் படிக்க அதிக பட்சம் ரூ.10 லட்சமும், வெளிநாட்டில் படிக்க ரூ.20 லட்சமும் கடனாக வழங்கப்படுகிறது.
மாணவர்கள்
பெறும் கடன் ரூ.4 லட்சம் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் குறைந்தபட்ச
வட்டி கணக்கிடப்படும். ரூ.4 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் இருந்தால்
வட்டி தொகையுடன் ஒரு விழுக்காடு தொகை சேர்த்து வசூலிக்கப்படும். ஆனால்
வட்டி விகிதம் வங்கிகளுக்கு வங்கி மாறுதலுக்குரியது.
ரூ.4 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு ஜாமீன் கேட்பது இல்லை. ரூ.4 லட்சத்துக்கு மேல் கடன் தொகை கேட்டால் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இதில் தான்
தற்போது மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்து புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த
உள்ளது. இதன்படி ரூ.7½ லட்சம் வரை கல்விக் கடன் பெறுபவர்கள் எந்தவித ஜாமீனோ
அல்லது உத்தரவாதமோ அளிக்க தேவையில்லை. இந்த திட்டத்தை மத்திய அரசு
விரைவில் கொண்டு வர இருக்கிறது. இதை மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
இந்த
திட்டத்தின்படி கடன் தொகையை மாணவர்கள் 20 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும்
சலுகையும் இடம் பெறுகிறது. படிப்பு முடிந்து வேலை கிடைத்த ஒரு ஆண்டு அல்லது
படிப்பு முடிந்த 1 ஆண்டுக்கு பிறகு கடனை திரும்ப செலுத்த வேண்டும். முன்பு
வேலை கிடைத்த 6 மாதம் என்று இருந்தது. மேலும் கல்விக் கடனை புதிய
திட்டத்தின்படி வட்டி விகிதம் 2 சதவீதத்துக்கு மேல் இருக்காது என்றும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்துக்காக மத்திய அரசு 5 ஆண்டுக்கு ரூ.3,500 கோடி ஒதுக்க இருக்கிறது. முதல் ஆண்டுக்கு ரூ.500 கோடியை ஒதுக்கி இருக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...