தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ஒரே ஆண்டில் 56 எழுத்துத்
தேர்வுகள் நடத்தப்பட்டதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
தேர்வாணையத்தின் அறிக்கை (2009 முதல் 2014 வரை), சட்டப்பேரவையில்
புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக
வெளியிடப்படும் தேர்வு அறிவிக்கைகளின் சதவீதம் தொடர்ந்து அதிகரித்து
வருகிறது. கடந்த 2012-13ஆம் ஆண்டில் மட்டும் 51 சதவீதம் அளவுக்கு தேர்வு
அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், அந்த ஆண்டில் 56 எழுத்துத்
தேர்வுகள் நடத்தப்பட்டன.
கடந்த 2013-14 ஆம் ஆண்டில் 14 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த ஆண்டில்,
பணி நியமனத்துக்காக மட்டும் 15 ஆயிரத்து 668 பேர் பரிந்துரை
செய்யப்பட்டுள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...