Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் பரிசோதனை அடிப்படையில் தொடக்கம்: 522 அஞ்சலகங்களில்ஆன்லைன் ஷாப்பிங் வசதி - பொதுமக்களிடம் வரவேற்பு

         தமிழகத்தில் பரிசோதனை அடிப் படையில் 522 அஞ்சலகங்களில் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய் யும் திட்டம் நடைமுறைக்கு வந் துள்ளது.அஞ்சல் துறையை லாபத்தில் இயக்குவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.இதையொட்டி, தமிழகத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் திட்டத்தை, எம்விகர்ஷா என்ற நிறுவனத்துடன் இணைந்து தொடங்கியுள்ளது.


            பரிசோதனை அடிப்படையில் இந்த திட்டத்தைச் செயல்படுத்து வதற்காக சென்னை மண்டலத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை மண்டலத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி மண்டலத்தில் ரங்கம், கரூர், கோவை மண்டலத்தில் திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய 8 கோட்டங்களில் உள்ள 522 அஞ்ச லகங்கள் தேர்வு செய்யப்பட்டுள் ளன.

அவற்றில் இதுவரை 299 அஞ்சலகங்களின் கம்ப்யூட்டர் களில் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான பிரத்யேக மென்பொருள் பதிவேற் றம் செய்யப்பட்டு, ஆகஸ்ட் இறுதி வாரத்தில் விற்பனையை தொடங்கி யுள்ளது.பொதுமக்கள் அஞ்சல் நிலையங் களுக்குச் சென்று தங்கம், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடை கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கத் தொடங்கியுள்ளனர். நேற்று முன்தினம் வரை சுமார் ரூ.1,25,894 மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்து, சென்னை மண்டலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தபடியாக திருச்சி மண்டலம் ரூ.67,448-க்கு பொருட்களை விற்றுள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.16,314-க்கும், கோவை மண்டலத்தில் ரூ.17,872 மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியது: மக்களிடம் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் அதிகரித்து வருகிறது. ஆனால், இணைய வசதி இல்லாததால் கிராம மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஈடுபட முடிவதில்லை. எனவே, கிராம மக்களுக்கு உதவும் வகையி லேயே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 522 அஞ்சலகங்களில் பரிசோ தனை முறையில்இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இது வரை 337 அஞ்சலகங்களில் விற் பனை தொடங்கியுள்ளது. ஓரிரு தினங்களில் மற்ற இடங்களிலும் தொடங்கிவிடும்.தனியார் நிறுவனங்களைப் போல நாங்களும் அவ்வப்போது பொருட்களுக்கு தள்ளுபடி அளிக் கிறோம். கடந்த 7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ஆன்லைனில் வாங்கும் தங்கத்துக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்கினோம். இதனால், ஆன்லைனில் தங்கம்விற்பனை அதிகரித்து வருகிறது. வரும் வாரங்களில் வேறு பொருட் களுக்கும் இதுபோன்ற தள்ளுபடி கிடைக்கும்.பொருட்களை வாங்க விரும்பு வோர் அஞ்சலகத்துக்குச் சென்று, ஆன்லைனில் தேவையானவற்றை தேர்வு செய்ய வேண்டும். அதன் விலை உள்ளிட்ட விவரங்கள் வாடிக் கையாளரின் செல்போனுக்கு குறுந்தகவலாக வரும். அடுத்த 2 அல்லது 3 நாட்களில் சம்பந்தப் பட்டஅஞ்சலகத்துக்குச் சென்று, பணத்தை செலுத்தி பொருளை பெற்றுக் கொள்ளலாம். நேரில் வர முடியவில்லை என்றால், அஞ்சல் ஊழியர்களே வீடு தேடி வந்து விநியோகிப்பர்.
பொருள் பிடிக்கவில்லை என்றால், உடனே திருப்பிக் கொடுத்து விடலாம்.மேலும், தங்களது கிராமத்தில் உள்ள அஞ்சலகத்திலிருந்து ஆன் லைன் ஷாப்பிங் மூலம் பரிசுப் பொருளை தேர்வு செய்து, வேறு கிராமத்தில் உள்ள உறவினர்களுக் கும் அனுப்பி வைக்க முடியும். அடுத்த ஆண்டுக்குள் அனைத்து அஞ்சலகங்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive