தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளின்
தலைமையாசிரியர்களில் 400 பேருக்கு மட்டும் தலைமைப் பண்பு பயிற்சி
சென்னையில் அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியை வழங்க மாவட்டத்துக்கு 4 பேர் வீதம் மாநில
கருத்தாளர்களாக தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களை
அவர்களின் தகுதி, திறமை, பணியில் அனுபவம், புதுமையான முயற்சிகளில் ஈடுபாடு
ஆகிய தர அளவீடுகளைக் கொண்டு தேர்ந்தெடுத்து, செப்டம்பர் 10-க்குள்
அனுப்பிட, மாநில தொடக்கக் கல்வி இயக்ககம் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி
அலுவலர்களுக்கும் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, மாவட்டத்துக்கு 4 பேர் வீதம், பயிற்சி வழங்கும் மாநில
கருத்தாளர்களாகப் பரிந்துரை செய்யப்பட்ட பெயர்ப் பட்டியல் வியாழக்கிழமை
மாலை மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...