தமிழகத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் 40 பேர் மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.தமிழகத்தின்
அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 20 பேர், மேல்நிலைப்பள்ளி
தலைமையாசிரியர்கள் 20 என 40 பேர் மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் அதற்கு
இணையான மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, மெட்ரிக்.,பள்ளி ஆய்வாளர்
பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு
செப்.,7 முதல் செப்., 19 வரை சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனத்தில் அவர்களுக்கான பயிற்சியளிக்கப்படுகிறது.கல்வித்துறை
உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,“மாவட்ட கல்வி அதிகாரிக்கான பொறுப்புகள்,
விதிகள், நிர்வாகம் குறித்து முழுமையாக பயிற்சியளிக்கப்பட்டு அவர்களுக்கு
பணியிடங்கள் ஒதுக்கப்படும்,”என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...