தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு பள்ளி கூட மூடப்படவில்லை என தமிழக
பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார்.தமிழக
சட்டப்பேரவையில் பள்ளிகல்வித்துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீது இன்று
நடைபெற்ற விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ திராவிட மணி, பள்ளிகளில் மாணவர்
சேர்க்கை குறைந்து விட்டதாக குற்றம்சாட்டினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் கே சி வீரமணி, கடந்த நான்கு ஆண்டுகளில் 182 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.மேலும், 107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் 810 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 402 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.கடந்த நான்கு ஆண்டுகளில் 72 ஆயிரத்து 843 ஆசிரியர்கள் நியமிக்கபட்டிருப்பதாகவும் கே சி வீரமணி கூறினார். கடந்த நான்கு ஆண்டுகளில் 53 புதிய கல்லூரிகள் தமிழகம் முழுவதும் தொடங்கபட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...