புதுச்சேரி கல்வித் துறையில், துவக்கப் பள்ளி ஆசிரியர்
பணிக்குவிண்ணப்பித்தவர்களுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில்,௨௧௪
பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.புதுச்சேரி, காரைக்காலில் அரசு துவக்கப்
பள்ளிகளில் காலியாக உள்ள 425 பணியிடங்களை நிரப்ப, கடந்த மே27ம் தேதி
அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பொதுபிரிவினருக்கு-217 இடங்கள், பிற்படுத்தப்பட்டோர்-140 ,எஸ்.சி.,- 68, மாற்றுத் திறனாளிகள்-18, இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கான விண்ணப்பங்கள், ஜூன் 17ம் தேதி வரை பெறப்பட்டன. 100 சதவீத மதிப்பெண்அடிப்படையில், பிளஸ் 2, ஆசிரியர் பட்டய படிப்புக்கு 85சதவீத மதிப்பெண்,வேலைவாய்ப்பு பதிவு மூப்புக்கு ௧௫ மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும் என,அறிவிக்கப் பட்டது.ரிசல்ட் வெளியீடு:தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை, பள்ளிக் கல்வி இயக்குனர் குமார், நேற்றிரவு வெளியிட்டார்.
காமராஜர் கல்வி வளாகத்தில், அறிவிப்பு பலகையில் ரிசல்ட் பட்டியல் ஒட்டப்பட்டது. பிளஸ்2 மற்றும் ஆசிரியர் பட்டயப் பயிற்சி தேர்வில் தோல்வியுற்று, கூடுதல் தேர்வு முயற்சி மேற்கொண்டவர்களுக்கு, ஒவ்வொரு முயற்சிக்கும் கூட்டு சராசரி மதிப்பெண்ணில் 5 மதிப்பெண் கழித்துக் கொள்ளப்பட்டு, ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது.425 துவக்கப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் பெற்றிருந்தாலும், ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் தளர்வு குறித்து ஐகோர்ட்டில் வழக்கு உள்ளதால், மெரிட் லிஸ்ட்டில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த 214 பேருக்கு மட்டுமே ரிசல்ட் வெளியிடப் பட்டுள்ளது.
இவ்வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பிற்கு பிறகு, மற்றவர்களுக்கு ரிசல்ட் வெளியிடப்படும் என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மெரிட் லிஸ்ட்டில் 1 முதல் 132 வரையுள்ள பொது பிரிவினருக்கு 30ம் தேதியும், 1 முதல் 76 வரையுள்ள ஓ.பி.சி., மற்றும் முதல் ஆறு இடங்களை பிடித்த எஸ்.சி., பிரிவினருக்கு அக். 1ம் தேதியும், காமராஜர் கல்வி வளாகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும் என, அறிவிக்கப் பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...