காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்புத் தனித்தேர்வு எழுதும்
மாணவர்களுக்கு வருகிற 21 முதல் 23-ஆம் தேதி வரை அறிவியல் பாட செய்முறைத்
தேர்வு நடைபெற உள்ளது.
2015-ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் 10-ஆம் வகுப்பு துணைத்
தேர்வு அறிவியல் பாடத்துக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் அந்தந்த
மாவட்டக் கல்வி அலுவலர்களால் வருகிற 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை
நடைபெற உள்ளது.
ஏற்கெனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள் தற்போது
அறிவியல் பாட செய்முறைத் தேர்வை எழுத வேண்டும். இந்தத் தேர்வர்கள்
கருத்தியல் தேர்வில் ஏற்கெனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருப்பினும்
செய்முறைத் தேர்வு எழுதிய பின்பு கட்டாயமாக மீள் கருத்தியல் தேர்வெழுத
வேண்டும். அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி பெற்று, செய்முறைத் தேர்வு
எழுதாமல் விடுபட்ட தனித்தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட நாள்களில் செய்முறைத்
தேர்வில் கலந்து கொள்ளலாம்.
நேரடி தனித் தேர்வர்களை பொருத்தவரை அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதிய
பின்னரே, அறிவியல் பாட கருத்தியல் தேர்வு உள்பட ஏனைய பாடங்களில் தேர்வெழுத
இயலும். இந்தத் தேர்வர்கள் ஏற்கெனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வுப்
பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்றிருப்பின் அவர்களும் மேற்குறிப்பிட்டுள்ள
தேதிகளில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுதிய
பின்னர் செப்டம்பர், அக்டோபர் 2015-க்கான தேர்வை எழுதலாம்.
மார்ச் 2016 தேர்வுக்கு அறிவியல் பாட கருத்தியல் தேர்வுக்கு
விண்ணப்பிக்க உள்ள தனித்தேர்வர்கள் ஜூன் 2015-இல் அறிவியல் செய்முறை
பயிற்சி வகுப்புக்கு பெயர்களைப் பதிவு செய்திருப்பர். அத்தகைய தேர்வர்கள்
செப்டம்பர், அக்டோபர் 2015 செய்முறைத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட
மாட்டார்கள்.
மேலும் செய்முறைத் தேர்வு நடத்தப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களை
சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...