பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க 20 நடமாடும் குழுக்கள் அமைப்பு
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்காக 20 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீதம் பொதுமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை
வழங்குவதற்கான அங்க அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக 50
குழுக்கள் அமைத்து பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தபட்டு வருகின்றன.
வெள்ளிக்கிழமை முதல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்காக பதிவு செய்யும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுவரை ஆதார் அடையாள அட்டைக்கு அங்க அடையாளங்கள் பதிவுகளை மேற்கொள்ளாத
மாணவ, மாணவிகளுக்கு மட்டும் இந்த முகாம்களில் அங்க அடையாளங்கள் பதிவு
செய்யப்படும்.
முகாம்களில் கைவிரல்களின் ரேகைள், கண்ணின் கருவிழிகள் பதிவு
செய்யப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் 1,716 பள்ளிகளில் 3 லட்சத்து 50
ஆயிரத்து 11 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் இதுவரை ஆதார்
அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் மட்டும் இந்த முகாமில் அங்க
அடையாளங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
ஆதார் அடையாள அட்டைக்கு 20 இயந்திரங்கள் கொண்ட குழுக்கள் பள்ளிகளுக்கு
நேரடியாகச் சென்று அங்க அடையாளங்களைப் பதிவு செய்து வருகின்றன எனத்
தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...