நாடு முழுவதும் உள்ள அனைத்து
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு 2, 4-ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறை
விடப்படும் நடைமுறை செப்டம்பர் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல்
தொடங்குகிறது.
இந்திய வங்கிகள் நிர்வாகிகள் அமைப்பும் (ஐபிஏ),
வங்கிகளின் தொழிற்சங்க நிர்வாகிகளும் செய்து கொண்ட உடன்பாட்டின்
அடிப்படையில், அனைத்து வங்கிகளுக்கும் 2-ஆவது 4-ஆவது சனிக்கிழமைகளில்
விடுமுறையை மாற்றுமுறை ஆவணங்கள் சட்டம் 1881-இன் அடிப்படையில் செப்டம்பர்
மாதம் முதல் அமல்படுத்துமாறு மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இந்த மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று (செப்டம்பர் 12)
வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும்.
இதேபோன்று 4-ஆவது சனிக்கிழமையன்று (செப்டம்பர்
26) வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். இவ்வாறு 2, 4-ஆவது சனிக்கிழமைகளில்
வங்கிகளுக்கு பொது விடுமுறை விடப்படுவதால், அனைத்து வங்கிகளும் மற்ற
சனிக்கிழமைகளில் தங்களது வார நாள்களின் வேலைநேரத்தில் முழுமையாகச்
செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...