Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

செப்.18-ல் வெளியாகிறது பி.எட். கட் ஆப் மதிப்பெண் பட்டியல்

                  அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 1,777 பி.எட். இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

                  விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

                        கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு வருகிற 28-ம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ம் வரை நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு முன்னர் கட் ஆப் மதிப்பெண் வெளியிடப்படும்.இதுகுறித்து தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை பாரதியிடம் கேட்டபோது, “பாடப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீடு வாரியான கட் ஆப்மதிப்பெண் பட்டியல் 18-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும். கட் ஆப் மதிப்பெண் விவரங்களை www.ladywillingdoniase.com என்ற


இணையதளத்தில்மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்” என்று தெரிவித்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive