சென்னை,செப்.23 (டி.என்.எஸ்) பா.ம.க ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஊதியம் வழங்கப்படும்,
என்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பா.ம.க.வின் 2016-ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான வரைவு தேர்தல் அறிக்கையை கடந்த 16-ந் தேதி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்.
இதனை மக்களிடம் கொண்டு செல்வதற்கான வரைவு தேர்தல் அறிக்கை விளக்க பயிற்சி முகாம் சென்னையில் நேற்று நடைபெற்றது.இந்த முகாமில் டாக்டர். ராமதாஸ், ஜி.கே.மணி, டாக்டர்.அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பா.ம.க.க நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:மக்கள் பா.ம.க.வை வித்தியாசமான கட்சி என்று எதிர்பார்க்கிறார்கள். நாம் ஒவ்வொருகுடும்பத்திற்கும் கல்வி, மின்சாரம் போன்றவற்றை இலவசமாக வழங்குவதன் மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாயை இலவசமாக்குவோம். பா.ம.க. ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் பஸ் கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தப்படமாட்டாது.மாறாக அந்த கட்டணங்களை குறைப்போம். தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு 15 நாளுக்கும் ஊதியம் வழங்கப்படும். ஒரு சொட்டு மது, ஒரு பைசா ஊழல் இல்லாத அரசு அமைப்போம். குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம். குடிசை இல்லாத தமிழகத்தை ஏற்படுத்துவோம். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓய்வூதியமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்குவோம். வேலையில்லாபட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மருத்துவ செலவை முழுவதும் இலவசமாக வழங்குவோம்.இவ்வாறு அவர் பேசினார்
.பயிற்சி முகாமில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட்டு வருகிறது. ஆனால், இதனை ஒரு சம்பிரதாயமாகத்தான் வெளியிட்டு வருகிறது. ஆனால், தற்போது பா.ம.க. சார்பில் வெளியிட்டு இருப்பது வரைவு தேர்தல் அறிக்கை தான். இறுதி தேர்தல் அறிக்கையின் முன்னோட்டம் தான். இதனை தமிழக மக்கள் முன் கொண்டு சென்று, ஆராய்ந்து நிறைவு தேர்தல் அறிக்கை வெளியிடுவதால், அதனை ‘மக்கள் சாசனம்’ என்று பெயரிட்டுள்ளோம்.வரைவு தேர்தல் அறிக்கையில், கருவில் இருந்து கல்லறை வரை ஒரு மனிதனுக்கு என்ன என்ன தேவையோ அவை அனைத்தும் இருக்கிறது. நமது கட்சியினர் ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் மற்றும் சிறு சிறு நோட்டீசுகள் மூலமாக மக்களிடம் இதனை கொண்டு செல்ல வேண்டும். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இலவச பொருட்களை தவிர்த்து கல்வியை இலவசமாக்குவோம்.தற்போது, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதாக கேள்விப்படுகிறேன். எனவே வாக்காளர் பட்டியலில் நமது கட்சியினரின் பெயர் இருக்கிறதா? என்பதை சரிபார்த்துக்கொள்வதுடன், நமது கட்சியினரின் புதிய வாக்காளர்களின் பெயர்களையும் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பரவாயில்லையே !
ReplyDeleteகுடிசை இல்லாமல் எப்படி??????? அதை பத்தவச்சி அரசியல் பன்னமுடியதே.
ReplyDeleteஇவை எல்லாம் சாத்தியப்படுமா?
ReplyDelete