Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி, கல்லூரி, பொது இடங்களில் 1.22 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்

        பள்ளி, கல்லூரி வளாகங்கள், பொது இடங்களில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 533 மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மாவட்ட வன அலுவலர் நிகார் ரஞ்சன் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியது:

தமிழக முதல்வரின் பிறந்தநாளையொட்டி வனத் துறை மூலம் தமிழகம் முழுவதும் 67 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 9 ஆயிரத்து 374 மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி, மதுரை மாவட்ட வனத் துறை சார்பில், மாட்டுத்தாவணி, சத்திரப்பட்டி, ஒய்.புதுப்பட்டி, உசிலம்பட்டி, காரைகேணி, சோழவந்தான், டி.ஆண்டிபட்டி, வாடிப்பட்டி ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டன.

இதில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 786 மரக்கன்றுகள் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கிராமப் பகுதிகளில் நடுவதற்காக ஊரக வளர்ச்சித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 1 லட்சத்து 22 ஆயிரத்து 533 மரக்கன்றுகள் அரசு நிலங்கள், அரசுத் துறை அலுவலக வளாகங்கள், தனியார் நிறுவனம், தொழிற்சாலை, பள்ளி, கல்லூரி, கோயில் வளாகங்கள், பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் நடப்படும்.

ஆகவே, மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கக் கூடிய வசதிகள் உள்ள இடத்தின் உரிமையாளர்கள், அரசுத் துறையினர் மரக்கன்று குறித்த தேவைக்கு மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தை அணுகலாம். இதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்து மரக்கன்றுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.




1 Comments:

  1. இன்றைய விதை நாளைய மரம்.
    **********************

    தமிழ்நாடு பி.எட்
    கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில்

    🌱🌱🌱🌱🌱🌱🌱

    சேலம் மாவட்டத்தில்
    மரக்கன்று நடுவிழா விரைவில் ....

    அனைவரும் வாரீர்! வாரீர்!

    சேலம் மாவட்டத் தலைவர்
    திரு சு.மணிவண்ணன் முன்னிலையில்

    **இன்றைய விதை மாணவர்கள்

    **விதைப்பவன் ஆசிரியர்கள்

    **நாளைய மரம் இந்தியாவின் எதிர்காலம் ..

    ஒவ்வொரு ஆசிரியர்களும் ஒரு சமுதாய எதிர்காலத்தை விதைக்கிறான் ....


    அனைவரும் வருக!வருக!வருக
    இவண்
    **********************

    தமிழ்நாடு பி.எட்
    கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்கள்.

    மற்றும்

    சேலம் மாவட்டத்தின் கன்றுகள்

    திரு மணிவண்ணன் (தலைவர்)
    9789142782
    திரு ராஜி செயலாளர்
    9003477851
    திரு சாரல் சி.சுரேஷ்குமார்
    துணைத் தலைவர்
    8012124040
    திருமதி சுகன்யா

    திரு வெ.குமரேசன் -9626545446(மாநில செயலாளர் ) 

    �லட்சியம் வெல்லும் நிச்சயம்�

    WEB:

    www.tnbedcsvips.com

    FB ID:
    bedcomputerscienc­­e@gmail.com

    EMAIL ID: 
    tnbedcsvips@gmail.com

    whats app:9626545446
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive